செவ்வாய், 23 மே, 2017

சர்வதேச வர்த்தக சட்டத்தில் சட்டமுதுமாணியில் தேர்ச்சி பெற்ற நீதிபதி மா.கணேசராஜா

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பிரித்தானியாவின் வெஸ்ட் லண்டன் பல்கலை கழகத்தில் சர்வதேச வர்த்தக சட்டத்தில் சட்ட முதுமாணி (LLM) Commercial low பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜீலை மாத்தில் நடைபெறவுள்ளது. West Londan பல்கலைகழகம் லண்டனில் முதல்தர நவீன பல்கலைகழகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இதற்கு முன்னர் அமெரிக்காவின் நோற்றடோம் பல்கலைகழகத்தில் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்கா சென்று சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் சட்டமுதுமானி (LLM) பட்டம் பெற்றிருந்தார்.மேலும் கொழும்பு பல்கலைகழகத்திலும் சர்வதேச இணக்கப்பாடுகள் தொடர்பில் பட்டமேற்படிப்பை பூர்த்தி செய்தவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624941

Translate