வெள்ளி, 27 நவம்பர், 2015

மயிலம்பாவெளியில் விபத்து - 8 பேர் காயம்

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர்  காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து தேவாலயமொன்றிற்கு ஒலிபெருக்கி சாதனங்களுடன் மட்டக்களப்பு நோக்கிச் வந்துகொண்டிருந்த வான் மயிலம்பாவெளி பகுதியில் அதிகாலை 4.20 மணியளவில் வீதியை விட்டு விலகி மறுபுறத்திலிருந்த மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


கல்லடிமட்டக்களப்பு, திராய்மடு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate