திங்கள், 23 நவம்பர், 2015

சவுக்கடி கடலில் மூழ்கி இளைஞன் பலி



மட்டக்களப்பு சவுக்கடிக் கடலில் இன்று திங்கட்கிழமை மாலை குளித்துத்துக்கொண்டிருந்த வேளையில் அலையில் சிக்கியதையடுத்து நீரில் மூழ்கி 18 வயதான இளைஞன்  மரணமடைந்துள்ளார். மயக்கமுற்ற நிலையில் மற்றுமொரு இளைஞன், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹமட் அம்ஜத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


கடலில் நான்கு இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தவேளையில் இந்த இருவரும் பாரிய அலையில் சிக்கி அள்ளுண்டு செல்லப்பட்பட்டுள்ளர். அதிலொருவரே பலியாகியுள்ளார். ஏனைய இரண்டு இளைஞர்களும்  நீந்திக்கரைசேர்ந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate