திங்கள், 23 நவம்பர், 2015

பாதுகாப்பு எதுவுமின்றி ஜனாதிபதி வைத்தியசாலைக்கு விஜயம்!

கடுமையான சுகவீனமுற்றுள்ள காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவின் நலன் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேரில் விஜயம் செய்துள்ளார்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் குணவர்த்தனவைப் பார்வையிட எதுவித ஆரவாரங்களும் இன்றி, பாதுகாப்பு அதிகாரிகளையும் தவிர்த்து விட்டு ஜனாதிபதி நேரில் வருகை தந்திருந்தார்.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் மஹிந்த அரசின் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரியின் வெற்றிக்காக அமைச்சர் குணவர்த்தனவும் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அரசாங்கத்தை விட்டும் வெளியில் வந்திருந்தார்.


அத்துடன் மஹிந்த அரசின் செல்லப்பிள்ளையும், வன்முறைக்கு அஞ்சாத அரசியல்வாதியுமான சுசந்த புஞ்சிநிலமேயை துணிச்சலுடன் எதிர்கொண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் வெற்றியை திருகோணமலை மாவட்டத்தில் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் திடீரென்று கடும் சுகவீனமடைந்துள்ள அமைச்சர் குணவர்த்தன, மேலதிக சிகிச்சைக்காக ஜனாதிபதியின் கடுமையான உத்தரவின் பிரகாரம் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate