புதன், 25 நவம்பர், 2015

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மூடப்பட்ட வாய்க்கால் திறக்கப்பட்டது

சட்டவிரோதமான முறையில் தனிநபர்களால் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு-கர்பலா பாலமுனை வாய்க்கால் ஆரையம்பதி பிரதேச சபையினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அகற்றப்பட்டது.
காத்தான்குடி பிரதேசத்திலிருந்து ஓடுகின்ற வெள்ளநீர் இவ் வாய்க்காலினூடாகவே கடலில் சேர்கிறது. குறித்த வாய்க்காலை பிரதேசத்தின் தனிநபர்கள் அடைத்து குறித்த காணிகளை சொந்தமாக்கி வந்தனர். இந்நடவடிக்கையால் பாலமுனை கிராமம் வெள்ளத்தினால் அழியும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
இதனை ஆரையம்பதி பிரதேச சபைக்கு பொதுமக்கள் சுட்டிக்காட்டியதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பிரதேச சபை செயலாளர் ஜே.அருள்பிரகாசம், குறித்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நீரிவழிந்தோடக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate