சனி, 9 ஜூலை, 2016

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ நற்கருணை உறுதிபூடுதல் வழங்கும் விசேட திருப்பலி

 (லியோன்)

மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு  தேவ அருள் அடையாளங்கள வழங்கும் விசேட திருப்பலி இன்று நடைப்பெற்றது
 மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த  திருவிழாவை முன்னிட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ நற்கருணை , உறுதிபூடுதல் ஆகிய  தேவ அருள் அடையாளங்கள வழங்கும் விசேட திருப்பலி இன்று (09) சனிக்கிழமை  முன்னாள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி  சுவாமிபிள்ளை தலைமையில் நடைபெற்றது .

இன்று நடைபெற்ற விசேட திருப்பலியில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் , அருட்பணி எ .தேவதாசன் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .

ஆலய திருவிழாவின்  திரு உருவம் பவனி  இன்று மாலை நடைபெறும் .  

நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு  அருட்பணி ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் விசேட  திருநாள்  திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate