புதன், 27 ஜூலை, 2016

பழுகாமம் கேணிக்கரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்

(பழுவூரான்)
கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் தென்பால் நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்று செல்வம் தழைத்தோங்கும் திருப்பழுகாமம் பதிதன்னில் கேட்பவர்க்கு கேட்டவரமளித்து அருள்பாலிக்கின்ற ஸ்ரீ கேணிக்கரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆடித்திங்கள் 12ம் நாள் (26.07.2016) ஆரம்பிக்கப்பட்டு
ஆடித்திங்கள் 18ம் நாள் (02.07.2016) ஆடிஅமாவாசை அன்று காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது.
27.07.2016 – பால்குடப்பவனியும், சங்காபிஷேகமும்
28.07.2016 – வேதபாராயணத்திருவிழா
29.07.2016 – திருவிளக்குப் பூசை
30.07.2016 – சப்புறத்திருவிழா
31.07.2016 – மாம்பழத்திருவிழா 
போன்ற விசேட திருவிழாக்கள் இடம்பெற உள்ளது. அனைத்து கிரியைகளும் உற்சவகால பிரதமகுரு வறக்காப்பொல, தோலங்கமுவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய குரு சிவஸ்ரீ நாராய சண்முகதாஸீஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெறும். 
a
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate