திங்கள், 17 அக்டோபர், 2016

இலக்கத் தகடு இல்லாத வாகனம் தொடர்பில் நீதிபதி அதிரடி உத்தரவு


மட்டக்களப்பில் இலக்கத்தகடு அற்ற வாகனம் தொடர்பில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக அழைத்து குறித்த விடயம் தொடர்பாக கண்டு பிடித்து உரிய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், 'மட்டக்களப்பு நகரில் நான்கு மாத காலமாக இலக்கத் தகடு அற்ற வாகனத்தினால் பொது மக்கள் பீதியில்' என்ற செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக குற்றத் தடுப்பு பொலிஸாரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்ததை அடுத்து மேற்படி அதிரடி நடவடிக்கையை நீதிபதி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இலக்கத் தகடு அற்ற வாகனம் தொடர்பில் உடனடியாக கண்டு பிடித்து இன்றைய தினம் கைது செய்வதாக குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate