சனி, 29 அக்டோபர், 2016

எப்படி வந்தது தீபாவளி?

(பழுகாமம் நிருபர்)
விஷ்ணுவிற்கும் பூமாதேவிற்கும் மகனாகப் பிறந்தவர் பவுமன். சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்னும் நிபந்தனையுடன் வரம் பெற்றான். 

இறைவனால் அழிக்கப்படும் நல்ல வாய்ப்புக்கள் நல்ல வழியில் செல்லும் பொழுது நன்மை கிடைக்கின்றது. ஆனால் அதிகமான செல்வம், அதிகாரம் போன்றவை வந்து விட்டால் மனம் தவறான பாதையை நோக்கியே செல்கின்றது. பவுமனும் இப்படித்தான் தவறான வழிகளில் சென்றான். தன்னைப் பற்றித் தாயிடம் புகார்கள் சென்றாலும் தாய் தன்னை எப்படிக் கொல்வாள் என்கின்ற எண்ணத்தில் தவறுகளை அதிகமாக்கி கொண்டே இருந்தான். பூலோகத்தில் இரந்த மக்களும், தேவலோகத்தில் தேவர்களும் இவனுடைய கொடுமைகளால் மிகவும் பாதிப்படைந்தனர். 
சிவனிடம் சொன்னார்கள். விஷ்னுவிடம் அவரது பிள்ளை என்பதால் சொல்லத் தயங்கினார்கள். தாயான பூமாதேவியோ பிறர் தனக்கு செய்யும் கொடுமைகளை கூட ஏற்றுக்கொள்ளும்  பொறுமைசாலி. சொந்த மகனைக் கொல்ல அவள் சம்மதிப்பாளா? என தேவர்களின் தலைவன் இந்திரன் தவித்தான். 
இருப்பினும் தாயான பூமாதேவி அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன் (அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனை கொல்ல உத்தரவிட்டார். பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை.இந்த விடயத்தை விஷ்னுவிடமே ஒப்படைத்தார். 
பூமாதேவி சத்தயபாமாவாகவும், விஷ்னு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்றுக் கொண்டு அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள். 
கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனடன் போரிட்டார்;. ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனெ சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்p எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் அவன் அழிந்தான். 
அவன் இறக்கும் தருணத்தில் பூமாதேவிக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது.  கிருஷ்ணரிடம் 'எனது மகன் கொடியவன் அவனை என் கையால் அழித்தது வருத்தமளிக்கிறது. அவன் இறந்த இந்நாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் விழா எடுக்க வேண்டும். ஐப்பசி சதுர்தசி திதியில் அவன் இறந்ததால், இந்நாளை இனிப்புக்களுடனும், தீபங்களுடனும் அனைவரும் கொண்டாட வேண்டும்.' என்று வேண்டுகோள் விடுத்தாள். கிருஷ்ணரும் அவளது வேண்டுகோளை நிறைவேற்றினார். இப்படித்தான் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. 
இறைவனுக்கே மகனாக இருந்த போதிலும் சில நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும். தாய் ஒருவனை எவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தாலும் அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியிருக்கிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன. இறப்பு என்பது தவிர்க்க இயலாதது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்கு பயன்படும் படியாக  வாழ வேண்டும். இப்படி சில படிப்பினைகளைச் சொல்லும் தீபாவளி சொல்வது இதுதான். நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் என்னும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்கு பயனுடையதாக வாழ்வோம். அனைவரும் தீபாவளி நல்வாழ்த்ததுக்கள் உரித்தாகட்டும். 
திலக்ஸ் ரெட்ணம். 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate