சனி, 1 அக்டோபர், 2016

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வாகனேரி மக்களை சந்தித்தனர்.


மட்டக்களப்பின் கல்குடாத்தொகுதியிலுள்ள எல்லைக்கிராமங்களில் ஒன்றான வாகனேரி இயற்கையின் கொடைகளான கற் பாறைகள்  நீர்நிலைகள் மணல்  செளிப்பான வயல்வெளிகள் காடுகள் என பல்வேறு விதமான பொருளாதார வழங்களை கொண்டுள்ளது. இதனை அண்டியதாக பொத்தானை வடமுனை போன்றன உள்ளடங்களாக ஐந்து கிராமங்களை கொண்டுள்ளது.

இங்கு 567 குடும்பங்களைக்  கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்குள்ள இயற்கை வழங்களையும் மனித வளத்தையும் சகோதர முஷ்லிம்கள் சூறையாடி வருவதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்  இதனை பல அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் பொருட்படுத்தாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்


மக்களின் அழைப்பை ஏற்று இன்று வாகனேரிக்கு விரைந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அக்கிராம மக்களின் முக்கிஷ்தர்களை சந்தித்து நிலைமைளை ஆராய்ந்ததுடன் பிரத்தியேக வகுப்பை நடாத்தும் நான்கு ஆசிரியர்ளுக்கு முதற்கட்டமாக 20000ரூபா வழங்கி மேலும் அப்பிதேச அபிவிருத்திக்கு தொடர்ந்து பங்களிப்புச்செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் போராளி ஒருவருக்கு அவசர உதவியாக ரூபா 20000 வழங்கப்பட்டது


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate