செவ்வாய், 25 அக்டோபர், 2016

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

(லியோன்)

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் சிறுமி ஒருவர்  தூக்கில் தொங்கிய நிலையில்    இன்று மீட்கப்பட்டுள்ளார்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  கருவப்பங்கேணி  அம்ரோஸ் வீதி  பகுதியில்  வீட்டின் அறையினுள் இருந்து   16  வயதுடைய  சிறுமி ஒருவரே  இன்று மாலை நான்கு மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த சிறுமி  மட்டக்களப்பு வவுணதீவு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  கரவெட்டி பகுதியை  சேர்ந்த  ரஜிதா   இருதயராசா  16 வயதுடைய இந்த சிறுமி  மட்டக்களப்பு கருவப்பங்கேணி அம்ரோஸ் வீதி  பகுதியியை சேர்ந்த தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
    
சடலமாக  மீட்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின்  மரணம் தொடர்பாக  விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate