செவ்வாய், 11 அக்டோபர், 2016

ஆரையம்பதி செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டம்

(ஆரை சீலன்)

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச  அபிவிருத்தி குழு கூட்டடமானது நேற்றையதினம்  (10)  திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டமானது   இணைத் தலைவர்களான   மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ்   மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற  உறுப்பினர்  ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றதுடன், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான என்.நடராசா, ஞா.கிருஸ்னபிள்ளை கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமது லக்ஷனா பிரசாந்தன் உட்பட பிரதேச செயலகத்தின் உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate