வைத்தியதுறையில் இனம் மதம் வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான முறையில் அபிவிருத்திகளை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். நேற்று(22) மாகாண சபையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டிற்கான சுகாதாரதுறை மீதான வரவுசெலவுத்திட்ட வாசிப்பின் போது உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியசேவையில் இனம் மதம் பார்க்கக் கூடாது என்பதில் நாங்களும் உடன்படுகின்றோம். ஆனால் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்யும் போது பிரதேசம், இனம், மத வேறுபாடுகள் பார்க்காமல் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கடந்தகால போர்சூழலினால் அதிகமாக பாதிக்கப்பட்டதாகும். அதிலும் படுவான்கரைப்பிரதேசம் அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகும். வைத்தியசேவை அதிகமாக தேவைப்படும் இடமாக மட்டக்களப்பு படுவான்கரைப்பிரதேசம் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் எழுவான்கரை என்று சொல்லப்படும் நகர்புறங்களை அண்டிய பகுதிகளிலே அபிவிருத்தியடைந்த வைத்தியசாலைகள் இருக்கின்றது. இங்கு வாழைச்சேனை. ஏறாவூர், காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய நான்கு ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. எழுவான்கரையில் உள்ள மக்கள் வசதி படைத்தவர்கள் அவர்கள் இலவச மருத்துவதறையையும் தாண்டி தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறக்கூடிய நிலையில் உள்ளனர். ஆகவேதான் படுவான்கரைக்கு வைத்தியசேவை அதிகமாக தேவைப்படுகின்றது. இந்த பின்தங்கிய பிரதேசங்களில் எங்கேயுமே அபிவிருத்தி அடைந்த வைத்தியசாலைகள் இல்லை. பட்டிப்பளை பிரதேச பிரிவில் மகிழடித்தீவு வைத்தியசாலை உள்ளது. அதற்கும் மட்டக்களப்பின் எல்லைக்கிராமமான கச்சக்கொடி சுவாமிமலைப்பகுதியில் உள்ள விவசாயிக்கு பாம்பு தீண்டுமாக இருந்தால்; போக்குவரத்து வசதி அற்ற பிரதேசத்தில் இருந்து 27கிலோமீற்றர் வரவேண்டிய நிலை அல்லது பழுகாமம் ஊடாக களுவாஞ்சிகுடி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் கூழாவடியில் இயங்கிய வைத்தியசாலை இன்று இயங்காமல் கட்டிடங்கள் புதிதாக உள்ளது. ஆகவே இந்த இடத்தில் சிறிய வைத்தியசாலை மீண்டும் இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த பிரதேச மக்கள் மிகவும் கஸ்டத்தில் அரசாங்க வைத்தியசாலையினை நாடி வருபவர்களும் இவர்களாகத்தான் இருக்கும். இவ்வாறான வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிகின்றேன். இது எந்தவிதத்தில் என்று எனக்கு புரியவில்லை. வைத்தியர்கள் மருந்துசீட்டுக்களை எழுதி கொடுத்து தனியார் மருந்தகங்களில் வாங்கும்படி பணிக்கின்றார்கள். ஆசிரியர் பற்றாக்கறையை தீர்ப்பதற்கு முதலமைச்சர் போராடுகின்றார் கல்வி அமைச்சர் துணை நிற்கின்றார். அதுபோல கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற தாதியர் பற்றாக்குறையாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் இரண்டு நிலையங்களில் உருவாக்குகின்றோம். அதனை மத்திய அரசுக்கு வழங்கி அவர்கள் போடும் பிச்சையை நாங்கள் பெற்றுக்கொள்கின்றோம். இந்நிலை மாற வேண்டும். சுகாதார அமைச்சர் மத்திய அரசுடன் சண்டையிட்டு அதனையும் பெற்றுக்கொள்ள வேண்டும். சகல இனங்களையும் சமமாக நினைத்து எங்கு எங்கு வைத்தியதேவை இருக்கின்றதோ அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக