மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ மமே/ஈச்சந்தீவு இராமகிருஷ்ண தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (2017.01.19) இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திரு.செ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.எஸ்மகேந்திரக்குமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.சோமசுந்தரம் அவர்களும் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு க.பரமானந்தம் அவர்களும் ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய பிரதம குருக்கள் திரு.இ.அருளானந்தம் அவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், ஈச்சந்தீவு மீனவர் சங்க தலைவர் அவர்களும் ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய தலைவர் அவர்களும் உதயசூரியன் விளையாட்டுக்கழக தலைவர் அவர்களும் SYLC அமைப்பு உறுப்பினர்களும் 1ம், 2ம் தர மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயற்றிட்டம் பாடசாலை கொடி ஏற்றலுடன் வித்தியாலய அதிபர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக