திருகோணமலையில் வடிசாராயம் விற்பனை செய்து வந்த ஒருவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை லிங்கநகர் பகுதியில் வடிசாராயம் பொலித்தீன் உரைகளில் இட்டு விற்பனை செய்து வந்த நிலையில் திருகோணமலை பொலிஸார் குறித்த நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் சந்தேகநபரை குற்றவாளியாக இணங்கண்டு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து நீதிபதி இன்று செவ்வாய் கிழமை (24) தீர்ப்பளித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக