வெள்ளி, 30 ஜூன், 2017

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று(30.06.2017 வெள்ளிக்கிழமை காலை  ஆனி உத்திர தினத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வந்தது. 




கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.கடந்த 21 ஆம் திகதி பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624978

Translate