ஞாயிறு, 31 மே, 2015

துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கலியாணகால் வெட்டும் நிகழ்வு

(துறைநீலாவணையிலிருந்து எஸ்.ஸிந்து)


மட்டக்களப்பு  துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கலியாணகால் வெட்டும் நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை (31.05.2015) மாலை 05.00 மணியவலில் அம்மன் ஊர்வலத்தை தொடர்ந்து தெய்வாதிகளால் தெரிவு செய்த மரத்திற்கு ஆலய பிரதம கட்டாடியினால்  விசேட பூசை தொடர்ந்து மரம் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.




Share:

தேற்றாத்தீவு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற கலியாண சடங்கு

எஸ்.ஸிந்து)
மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மனின் வருடந்த கலியாண திருச்சடங்கின் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.05.2015) தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்றாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 08.00 மணிக்கு வசந்தன் கும்மி கோலாட்டம் என்பன ஆடப்பட்டு பூசை பொருட்கள் பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடந்து மாலை 03 மணியளில் கண்ணகை அம்மனின் கலியாண திருச்சடங்கு இடம் பெற்றது.



Share:

சர்வதேச புகைத்தல்,மதுஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணிகள்

சர்தேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினம் இன்றாகும்.இன்று 31ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி வரை இந்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
Share:

ஆரையம்பதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு


மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.மடட்க்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று ஆரையம்பதி பகுதியில் வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.விபத்து தொடர்பில்  மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
Share:

பொன் அணிகளின் சமரில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியன்

மட்டக்களப்பின் பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் ஐந்தாவது மாபெரும் கிரிக்கட் போட்டி(பிக் மட்ச்ஸ்)யில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
Share:

நாடு முழுவதும் பாரிய கண் நோய்.! எச்சரிக்கை..!

நாடளாவிய ரீதியில் ஒருவித கண் நோய் பரவியுள்ளதாக சுகாதார தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.கண் நோய்க்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கண் நோய் வைத்தியசாலையின் நிபுணர் டொக்டர் கபில பந்துதிலக்க குறிப்பிட்டார்.










கண்கள் சிவத்தல், கண்களில் அரிப்பு, கண்களில் கண்ணீர் மற்றும் கபம் வடிதல் ஆகியன இந்த நோயின் அறிகுறிகளாகும்.சில சந்தர்ப்பங்களில் கண் இமைக்கு அருகில் வீக்கம் ஏற்படுதல் அல்லது கண்ணீருடன் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என டொக்டர் கபில பந்துதிலக்க சுட்டிக்காட்டினார்.கண் நோய் தொற்றுக்கு இலக்காகியிருந்தால் உடனடியாக தகுதியான வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Share:

சனி, 30 மே, 2015

சமூகசேவைகள் உத்தியோகத்தர் மதிதயன் படுகொலை குற்றவாளி யார்? - வலை விரிக்கும் பொலிஸார் (ஆய்வுக்கட்டுரை)

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிர­தே­சமே மண்டூர். அமை­தி­யாக இருந்த அந்­தப்­பி­ர­தே­சத்தின் அமைதி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் குலைக்­கப்­பட்­டது.
Share:

“முதலமைச்சருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டம்”

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காவிட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுப்பது என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Share:

அம்பாறையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை


காலை ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் கிராமத்தின் முஹம்மது அலியார் வீதியைச் சேர்ந்த சித்தீக் பௌஸர் (27 வயது) என்றழைக்கப்படும் இளம் குடும்பஸ்தர், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


தனது மனைவி பிள்ளையுடன் இவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், இவரை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டு நிந்தவூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது
Share:

மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நடை­பெறும் தாக்­கு­தல்­களைக் கண்­டித்து ஏறா­வூரில் ஆர்ப்­பாட்டம்.

மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நடை­பெறும் தாக்­கு­தல்­களைக் கண்­டித்து ஏறா­வூரில் நேற்று ஆர்ப்­பாட்டம்  நடை­பெற்­றது. உயி­ரியல் உரி­மை­க­ளுக்­கான எல்­லை­களற்ற அமைப்பின் ஏற்­பாட்டில் ஜூம்ஆ தொழு­கையைத் தொடர்ந்து முதலாம் குறிச்சி பள்­ளி­வா­ய­லி­லி­ருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தவி­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பஷீர் சேகு­தாவுத் உட்­பட்ட பெருமளவு பொது­மக்கள் தமது கோரிக்­கைகள் அடங்­கிய பதா­கைகளை ஏந்­தி­ய­வண்ணம் ஊர்­வ­ல­மாக வந்தனர்.
Share:

தும்பங்கேணி கல்லடி வாவி ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

(செந்தூரன்)

மட்டக்களப்பு தும்பங்கேணி கல்லடிவாவி ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் வியாழக்கிழமை முன்னிரவு ஆயிரங்கண் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மண் எடுத்தலுடன் ஆரம்மாகியது.
Share:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்

புதிய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மட்டக்களப்பு மாவடடத்தில் முதலாவது பிரதேச அபிவிருத்;தி மீளாய்வுக்கூட்டம் இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
Share:

வெள்ளி, 29 மே, 2015

இந்துகல்லூரி-பெரியகல்லாறு மத்திய கல்லூரி மோதும் சமர் நாளை

மட்டக்களப்பின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் ஐந்தாவது மாபெரும் கிரிக்கட் போட்டி(பிக் மட்ச்ஸ்) நாளை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
நாளை காலை 8.00மணியளவில் பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளது.
Share:

களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கும்மி, சிலம்பொலி பாடல் இறுவெட்டுகள் வெளியீடு 

(Vanchi Oli) வரலாற்று சிறப்பு மிக்க களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வரலாறு போற்றும் பாடல் இறுவெட்டுக்கள் வெளியீடப்பட்டது. 26.05.2015 மாலை 5.15 மணியளவில் Dr.ப.சதீஸ் அவர்களால் எழுதப்பட்டு ஆலய உதவிக் குரு க.தர்சனன் குருக்களால் பாடப்பட்ட கண்ணகை அம்மன் கும்பிப் பாடல் வெளியிடப்படது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

27.05.2015 மாலை 5.15 மணியளவில் Dr.ப.சதீஸ் அவர்களால் எழுதப்பட்டு பாடகர் ம.வினோகரன் அவர்களால் பாடப்பட்ட பிள்ளையார், கண்ணகை அம்மன் பக்திப் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் Dr.கு.சுகுணன், பாடும் மீன் சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன் போது இவ் இறுவட்டுகள் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது.



Share:

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலய கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் வலய மாக்கான் மாக்கார் வித்தியாலத்தின் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (28) பாடசாலை அதிபர் எம்.எம்.மொஹிடீன் தலைமையில் இடம்பெற்றது.சுமார் 950 மாணவர்களுடன் இயங்கிவரும் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் ஏற்பட்டிருக்கும் கட்டிடப் பற்றாக்குறை சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பாடசாலை நிர்வாகம் எடுத்துக்கூறியதை தொடர்ந்து முதலமைச்சரால் குறித்த பாடசாலைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
குறிப்பிட்ட நிதியொதுக்கீட்டின் அடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலை கட்டிட அடிக்கல் நடும் விழா நேற்று  (28) காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஏராவூர் வலையக் கல்வி அதிகாரி கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
Share:

காத்தான்குடியில்; மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஏற்பாட்டில் பர்மா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டுத்தும் , அக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிடக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் காத்தான்குடி கலாச்சார மண்டபத்திற்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் , பின் பேரணியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று முஸ்லிம்களுக்கெதிராக மியன்மார் அரசின் அராஜகங்கள் இலங்கை அரசு உடனடியாக கண்டிக்க வேண்டும்.
Share:

அமெரிக்க தூதரக அதிகாரிகள் கிழக்கு முதலமைச்சரை சந்திப்பு

(ஊடகபிரிவு)

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி கேட்டறிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த மைக் ரீட் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரின் காரியலயத்தில் சந்தித்தனர்.
Share:

திருகோணமலை,உப்புவெளியில் வெடிபொருட்கள் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்கம்விகாரை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிக்குச்சுகள் ஒரு தொகையினை திருகோணமலை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினர் மீட்டுள்ளனர்.
Share:

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா!

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால்  நடாத்தபப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒன்றரை வருட டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (28) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி அமைச்சர் ரி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார். இங்கு உரை நிகழ்த்திய முதலமைச்சர் இம்மாகாணத்தில் 3900 முன்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் கடமைபுரியும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் -  பாடசாலையில் சிறந்த  அடைவு மட்டங்களைப் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டுமே தவிர கட்டிடம், தளபாடம், ஆளணி போன்ற பௌதீக வளங்களை மட்டும் பெறுவதில்  பாடசாலை நிர்வாகத்தினர்  ஆர்வம் செலுத்தக்கூடாது. இந்நாட்டில் தற்போது மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கியதில் முக்கிய பங்கு கொண்டவர்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆனால் அவர்கள் எந்தப் பயனும் இன்னும் முழுமையாக அடையவில்லை விரைவில் அனைத்து பயன்களை அடைய தமிழ் முஸ்லிம் அரச தலைவர்கள் ஒன்றுபட வேன்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தன் உட்பட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பாலர் கல்வி பணியக அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளில் கடமைபுரியும் 115 ஆசிரியையகள் டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இப் பயிற்சி நெறி கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





Share:

கிரான்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்து - மூவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளம் பிரதேசத்தின் பிரதான வளைவில் இன்று (29) வெள்ளிக்கிழமை காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்றுபேர் காயமடைந்ததுடன் , ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில்  அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிட்சைக்கு உட்படுத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குருநாகலில் இருந்து கல்முனைக்கு மரண வீடொன்றிற்கு சென்றுகொண்டிருந்த வேன் கிராங்குளம்  பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதில் பயணித்த நபரின் தாயாரின் மரண இறுத்திச் சடங்கிற்காக கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த வான் சாரதி உட்பட மூவர் பயணித்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளகியதுடன் , குறித்த வேனின் முற்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. முன்கம்பமும் முறிவடைந்து சரிந்த நிலையில் உள்ளது.
Share:

இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை

மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வலயங்களை (Free Wi-Fi Zones) நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ், திஸ்ஸமகாராம பஸ் தரிப்பிடத்திலும் இலவச வைஃபை வலயம் நிறுவப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
குறிப்பாக களுத்துறை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களிலும் விரைவில் இலவச வைஃபை வலயங்களை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
இலவச வைஃபை வலயங்கள் நிறுவப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை www.freewifi.lk என்ற இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவு நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையத்தளத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Share:

திக்கோடை பிரதானவீதியில்முச்சக்கரவண்டியுடன் பார ஊர்தி மோதி விபத்து (Photos)

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திக்கோடை பரிரதானவீதியில் முச்சக்கரவண்டியும்  பாரஊர்தி மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து
களுவாஞ்சிக்குடிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளசம்பவம் 27 ஆம் திகதி புதன் மதியம்  இடம்பெற்றுள்ளது
 
இவ் விபத்துத் தொடர்பாக மேலும் தெரியவருகையில் திக்கோடை பிரதான வீதியால் களுவாஞ்சிக்குடிநோக்கி வந்த முச்சக்கரவண்டியுடன் அதே திசையினை நேக்கிவந்த பார ஊர்தியும் ஓன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
 
இதில் திருநாவுக்கரசு யோகராசா என்ற முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் மேலதிக விசாரணையினை வெல்லாவெளிப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

வியாழன், 28 மே, 2015

காணாமல் போனதாக கூறப்பட்டவர்கள் பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இருவர் நேற்று (26.05.2015) தொழில் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்திற்குச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட இருவரும் குச்சவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காணமால் போனவர்களது உறவினர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.



ஓட்டமாவடி 02ம் வட்டாரம் பி.எஸ் வீதியைச் சேர்ந்த சஹாப்தீன் நாசர் மற்றும் இஸ்மாலெப்பை அதம்பாவா ஆகிய இருவரும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை நிலாவளி, குச்சவெளி பொன்ற பகுதிகளுக்குச் சென்று படகின் இயந்திரங்களை கொள்முதல் செய்து மட்டககளப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விற்பனை செய்து வந்தவர்களாவர்.
இவர்கள் விற்பனை செய்த படகு இயந்திரங்களில் சில திருடப்பட்டு திருடர்கலால் இவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட இயந்திரங்களும் உள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்ததாக இவர்களது குடும்ப உறவினர் தெரிவித்தார்.
குச்சவெளி பொலிஸ் பிரிவில் படகு இயந்திரங்கள் திருட்டுடன் சம்மந்தப்பட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில இவர்கள் பொலிஸாருககு வழங்கிய தகவலின் அடிப்படையிலயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பாக குச்சவெளி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்மந்தப்படரவ்களின் குடும்ப உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
Share:

கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி ஆரம்பம்.


(Akshayan) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியத் தெய்வ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக கோராவளி அமைந்துள்ளது. மருதமும் , குறிஞ்சியும் ஒருங்கே அமையப் பெற்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி சடங்கானது எதிர்வரும் 01.06.2015 (திங்கள்) அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 02.06.2015 (செவ்வாய்) அன்று திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிறைவு பெறவுள்ளது.

Share:

மட்டக்களப்பில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம் தோன்றியுள்ளதாக காட்டமுயற்சி –பிள்ளையான்

மட்டக்களப்பில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது போன்ற பதற்ற நிலையினை ஏற்படுத்தியுள்ள மண்டூர் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக பொலிசார் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
Share:

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தென்னம் கன்றுகள் நடும் நிகழ்வு

( ஜெயஹரி )
உலக சுற்றாடல் தினத்தை  முன்னிட்டு தென்னம் கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி வசந்தகுமாரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
Share:

தும்பங்கேணி கல்லடிவாவி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு தும்பங்கேணி கல்லடிவாவி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று(28.05.2015) வியாழக்கிழமை முன்னிரவு ஆயிரங்கண் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மண் எடுத்தலுடன் ஆரம்மாகவுள்ளது.


எதிர்வரும் சனிக்கிழமை (30.05.215) கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது, திங்கட்கிழமை (01.06.2015) விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணலும் பூசை ஆராதனையும் இடம்பெறவுள்ளது, அம்மனின்  திருக்குளிர்த்தில் செவ்வாய்கிழமை(02.06.2015) இடம் பெறவிருக்கின்றது.

Share:

புதன், 27 மே, 2015

கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டிகளில் பூப்பந்தாட்ட போட்டியில் 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்டது.
Share:

பிறந்த 2வது குழந்தையும் வடிகானில்,ஆலை­ய­டி­வேம்பில் சம்பவம்!

ஆலை­ய­டி­வேம்பு கோளாவில் பிர­தேச வடிகான் ஒன்­றி­லி­ருந்து கைவி­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்­தே­கிக்­கப்­படும் பெண்­ணொ­ரு­வரை நேற்று முன்­தினம் இரவு கைது செய்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.பொலி­ஸா­ருக்கு பெண் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கிடைத்த இர­க­சிய தக­வ­லொன்றை அடுத்து பொலிஸார் கோளாவில் பிர­தே­சத்தில் வைத்து குறித்த பெண்ணைக் கைது செய்­துள்ளனர்.


திருமணமாகாத இந்தப் பெண், எற்கனவே இரண்டு குழந்தைகளை பிரசவித்து இப்படி கைவிட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். கைது செய்­யப்­பட்ட பெண் மருத்­துவப் பரி­சோ­த­னைக்­காக அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.ஆலை­ய­டி­வேம்பு கோளாவில் பிர­தே­சத்தில் கடந்த 22ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பி.ப. 12.30 மணி­ய­ளவில் வடிகான் ஒன்­றி­லி­ருந்து கைவி­டப்­பட்ட நிலையில் கிடந்த ஆண் சிசு­வொன்றை அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கண்­டெ­டுத்தார். பொலி­ஸா­ருக்கும் தகவல் கொடுத்தார்.
இத­னை­ய­டுத்து பொலிஸார் குறித்த சிசுவை அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையின் சிறுவர் பரா­ம­ரிப்புப் பிரிவில் அனு­ம­தித்­துள்­ளனர்.பொலிசாரின் விசாரணையில், அந்தப்பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளார்.இவர், ஏற்­க­னவே இரு பிள்­ளை­களை இவ்­வாறு பிர­ச­வித்­துள்­ள­தா­க கூறப்படுகிறது.இதே­வேளை, கைவிடப்பட்ட இந்த சிசுவை தத்தெடுத்து வளர்க்க இரண்டு பெண்கள் முன்வந் துள்ளதாக தெரிகிறது.
Share:

தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 22.ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கதவு திறந்து வைக்கப்பட்டு உற்சவ பெருவிழா ஆரம்பமானது .
Share:

வெளிநாட்டுக்கு செல்லவுள்ள பெண்களை இங்கு வருமானம் ஈட்டச்செய்வதற்கான வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினால்  பெண்கள் விவகார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்ப்பினை எதிர்பார்த்து இருக்கும் பெண்களின் மனநிலையினை மாற்றி வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி இன்று மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலாளர் வி. தவராசா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
Share:

ஆரையம்பதி கண்ணகி அம்மன் ஆலய பாடல் இறுவெட்டு எதிர் வரும் 29 திகதி வெளியீடு

( சிமஷ்னு )
ஆரையம்பதி கண்ணகி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரையூர் தெய்வ தரிசனம் எனும் பெயரில் இறுவெட்டு ஒன்று ஆலய திருப்பணிச் சபையினரால் வெளியிடப்படவுள்ளது, ஆரையம்பதி மூத்த கவிஞர் மு.கணவதிப்பிள்ளை (மு.க) அவர்களின் கவி வரிகளில் தென்இந்திய பிரபல பாடகர்களால் பாடப்பட்ட ஏழு (07) பாடல்கள் அடங்கிய இவ் இறுவெட்டு ஆலைய வருடாந்த சடங்கு உட்சவத்தில் ஐந்தாம் நாள்  வெயியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share:

பேருந்து விபத்து கல்குடா வலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் காயம்



கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் 14 பேர்  காயமடைந்துள்ளதுடன் இவர்களின் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.






கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்திற்குச் சொந்தமான பஸ்ஸில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் புறநகர்ப் பகுதியில் வைத்து டிப்பர் ஒன்று மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.கொழும்பு மீபே தெற்காசிய ஆசிரியர் வள நிலையத்தில் 'கருத்திட்டப் பொருள்- 2015' எனும் செயலமர்வில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு நோக்கி வரும்வேளையில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனரின் அசமந்தப் போக்கினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

சமூகசேவைகள் உத்தியோகத்தர் படுகொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்குவதன் மூலமே பொதுமக்களிடையேயும் அரச உத்தியோகத்தர்கள் மத்தியிலும் உள்ள அச்சநிலையினை போக்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share:

சம்மாந்துறை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சம்மாந்துறை  கோரக்கர் கோயில் தமிழ் மகா வித்தியாலயத்தில்  க.பொ.த (சா/த)  பயின்ற மாணவியான கனகசூரியம் நிலக்சிகா (வயது 15) நேற்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கோரக்கர் கோயில் உதயபுரம் தமிழக்குறிச்சி  4 ஆம் பிரிவிலுள்ள அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி மீட்கப்பட்டார்

சம்பவ இடத்திற்கு நேற்று(26.05.2015) பிற்பகல் 3.30  மணியளவில் சென்ற சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் தூக்கில் தொங்கிய மாணவியைப் பார்வையிட்டு அறிக்கையிட்டார்நேற்றுக்காலையில் நிலக்சிகாவின் தாயார் வேலைக்கு சென்றதுடன் சகோதரர்களும் பாடசாலைக்கு சென்றுள்ளனர் . நிலக்சிகா பாடசாலை செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்

இந்நிலையில் சகோதரர்கள்  பாடசாலை விட்டு பிற்பகல் 1.40மணியளவில் வீடு வந்த போதுதான் நிலக்சிகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் இம்முறை க.பொ.த (சா//த)  பரீட்சை எழுதவிருந்த இம்மாணவியின் மரணம் குறித்து சம்மாந்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Share:

செவ்வாய், 26 மே, 2015

துறைநீலாவணையில் சீர்பாததேவியின் சிலை திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட துறைநீலாவணையில் கிழக்கிலங்கையின் சிற்றரசியாக இருந்த சீர்பாததேவிக்கு அமைக்கப்பட்ட சிலையை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
Share:

மாவடிவேம்பில் - புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு! (திருத்தம்)

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் வைத்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர கடுகதி புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிந்துள்ளதாக தெரியவருகின்றது.
Share:

செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு


மீன் பாடும் வாவிமகள் தேன் நாட்டில் சூழ்ந்தோடும் உழவர் திருநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் செட்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்  ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2015.05.29ஆம் திகதி முன்னிரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.



ஞாயிற்றுக்கிழமை(31.05.2015) பகல் கல்யாணச்சடங்கு தேற்றாத்தீவு மக்களாலும் திங்கட்கிழமை(01.06.2015) பின்னிரவு குளிர்த்தில் சடங்கு களுதாவளைமக்களாலும் திருச்சடங்கு இடம்பெறவுள்ளது.


Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate