புதன், 27 மே, 2015

பேருந்து விபத்து கல்குடா வலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் காயம்



கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் 14 பேர்  காயமடைந்துள்ளதுடன் இவர்களின் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.






கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்திற்குச் சொந்தமான பஸ்ஸில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் புறநகர்ப் பகுதியில் வைத்து டிப்பர் ஒன்று மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.கொழும்பு மீபே தெற்காசிய ஆசிரியர் வள நிலையத்தில் 'கருத்திட்டப் பொருள்- 2015' எனும் செயலமர்வில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு நோக்கி வரும்வேளையில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனரின் அசமந்தப் போக்கினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate