வியாழன், 21 மே, 2015

ஜெயலலிதா வருகிற இருபத்து மூன்றாம் திகதி முதல்வராக பதவியேற்பு


அதிமுக பொதுச்செயலளார் ஜெயலலிதா வருகிற 23ம் திகதி தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 

வருகிற 22ம் திகதி அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது. அப்போது அதிமுக எம் எல் ஏக்கள், ஜெயலலிதாவை சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிய வருகிறது. இதையடுத்து தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர் செலவம், தமிழக ஆளுனரை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க உள்ளார். பிற்பகல் 2 மணி அளவில் ஜெயலலிதா பெரியார், அண்ணா, எம்ஜிஆர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அடுத்து 23ம் திகதி ஆளுநரின் அழைப்பின் பேரில் நூற்றாண்டு மண்டபத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 3 முறை ஜெயலலிதா நூற்றாண்டு மண்டபத்தில்தான் பதவி ஏற்றார் என்பதும், இப்போது 5 வது முறையாக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate