வெள்ளி, 29 மே, 2015

திக்கோடை பிரதானவீதியில்முச்சக்கரவண்டியுடன் பார ஊர்தி மோதி விபத்து (Photos)

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திக்கோடை பரிரதானவீதியில் முச்சக்கரவண்டியும்  பாரஊர்தி மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து
களுவாஞ்சிக்குடிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளசம்பவம் 27 ஆம் திகதி புதன் மதியம்  இடம்பெற்றுள்ளது
 
இவ் விபத்துத் தொடர்பாக மேலும் தெரியவருகையில் திக்கோடை பிரதான வீதியால் களுவாஞ்சிக்குடிநோக்கி வந்த முச்சக்கரவண்டியுடன் அதே திசையினை நேக்கிவந்த பார ஊர்தியும் ஓன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
 
இதில் திருநாவுக்கரசு யோகராசா என்ற முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் மேலதிக விசாரணையினை வெல்லாவெளிப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate