வியாழன், 21 மே, 2015

மட்டக்களப்பு மாநகர தீயணைப்புப் பிரிவிற்கான அவசர தொலைபேசி இலக்கம் 065-2222222

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிற்கான அவசர தொலைபேசி இலக்கம் 065 22 22 222 என மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்கள் தெரிவித்தார். இதன்மூலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீ அனர்த்தம் ஏற்படும் போது மக்கள் மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தரும் வேளையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.

மேலும், மட்-புனித மிக்கேல் கல்லூரியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தானது உரிய வேளையில் அறிவிக்கப்பட்டதனால் மாநகர தீயணைப்பு பிரிவு துரியமாக செயற்பட்டு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate