திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சட்ட விரோத சாராயம் விற்ற பெண் கைது

சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து சாராயம் விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குடும்பப் பெண்ணொருவரைத் தாம் கைது செய்திருப்பதாக அம்பாறை- கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

வெருகல் பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதலில் எட்டுப்பேர் காயம் -இருவர் கைது

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் பொலிஸார் பொதுமக்கள் என எண்மர் காயமடைந்தும் இருவர் கைதுசெய்யப்பட்டுமுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகத்தின் 44வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு,முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகம் 44வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கல்லடி,கடல்மீன்கள் அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
Share:

வினாப் பத்திரங்களை திருத்தும் பணிகள் செப்டம்பர் 09 - 14 வரை


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 38 பாடசாலைகளில் இப்பணி இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 
கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள 2907 நிலையங்களில் நடைபெற்ற தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரத்தி 926 மாணவர்கள் தோற்றியிருந்தனர். 
இதேவேளை, தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப்பத்திரங்களை திருத்தும் பணிகள் செப்டம்பர் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை 23 பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன. இப்பணிகள் 8 பாடசாலைகளில் முழுமையாகவும், 15 பாடசாலைகளில் பகுதியளவிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி இருகட்டங்களாக நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 08ம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. ஆகஸ்ட் 4ம் திகதி ஆரம்பமாகி 17ம் திகதிய பொதுத் தேர்தலுக்காக கடந்த 13ம் திகதி நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைசையின் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 24ம் திகதி திங்கட்;கிழமை ஆரம்பமாகியது. ஆகஸ்ட் 14 முதல் 23ம் திகதி வரையான காலப் பகுதியில் உயர்தரப்பரீட்சை நடைபெறவில்லை. இதுகுறித்து முன்கூட்டியே பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்முறை, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 9 ஆயிரத்தி 69 பேர் தேற்றிவருகின்றனர். இவர்களில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 72 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 72 ஆயிரத்து 997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 2180 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்;கு தோற்;றிவருகின்றனர்.
Share:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் கட்சித்தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் (30.08.2015) நடைபெற்றது இக்கூட்டத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதியின் கிராமமட்ட அமைப்பாளர்களும், பிரதேச இனணப்பாளர்களும் கலந்து கொண்டனர்


Share:

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

மண்டூர் உற்சவத்தின்போது சட்ட விரோத மதுவிற்பனை செய்தவர்கள் கைது –மதுபோத்தல்களும் மீட்பு

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஆலயத்திற்கு அருகான பகுதியில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனைசெய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Share:

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேச மகா சபைக் கூட்டம்


வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேச மகா சபைக் கூட்டம் 2015.08.30ஆம் திகதி இடம்பெற்றது.
அக்கூட்டத்தின்படி வருடாந்த மஹோற்சவம் 2015.09.14 அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2015.09.27 (ஞாயிறு) தேரோட்டமும் 2015.09.28 (திங்கள்) தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
அத்தோடு புதிய நிருவாக சபைத் தெரிவும் இடம்பெற்றது. இதன்படி தலைவர் பூ.சுரேந்திரராசா வண்ணக்கர் (கலிங்க குலம்), செயலாளர் இ.சாந்தலிங்கம் வண்ணக்கர் (படையாட்சி குடி), பொருளாளர் பா.சபாரெத்தினம் வண்ணக்கர் (உலகிப்போடி குடி) ஆகியோரும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டனர். இவைதவிர குடிகள்சார்ந்து 2 பேர் விகிதம் உறுப்பினர்களாக தெரி வுசெய்யப்பட்டனர். 
அத்தோடு பணிக்கனார் குடிமக்களின் கோரிக்கையினைக்கருத்தில்கொண்டு இவ்வாண்டுமுதல் அக்குடி திருவிழாவிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாலயத்தில் பண்டுபரபணியோடு குடி சார்ந்த திருவிழா முறைமை நடைமுறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

குழந்தை யேசு ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு, எல்லைவீதி, திசவீரசிங்க சதுக்கத்தில் தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை ஆலய பங்கின்கீழ் அமைந்துள்ள குழந்தை இயேசு சிற்றாலய திருவிழாவானது 30.08.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Share:

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாதுறை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் ஆரம்பம்

சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் பல்வேறு திட்டங்கள் மட்டக்களப்பு நகரில் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
Share:

அஸ்பெஸ்டோஸ் சீட்டுகளுக்கு தடை

இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் சீட் (asbestos sheet) வகைகளை பயன்படுத்துவதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது. 

Share:

மட்டக்களப்பு மாநகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கொளரவிப்பு


மட்டக்களப்பு பாடும் மீன் லயன்ஸ் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு மாநகர சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) நகர மண்டபத்தில் நடைபெற்றது.

'சேவைக்கு மகுடம் சூட்டும் மீனோசை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், 130 சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் விருதுகள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
Share:

அம்பாறையில் தீ விபத்து! 15 கடைகள் சேதம்

அம்பாறை, டி.எஸ்.சேனாநாயக்க வீதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பரவிய தீயினால் 15 கடைகள் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 3 மணியளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அம்பாறை தீயணைப்பு சேவைப் பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
Share:

நிரோஷன் என்ற கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்புக்கு கொழும்பிலிருந்து வருவதற்காக காத்திருந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞன் வெள்ளவத்தை பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்த போது தொலைபேசி கெட் செட்மூலம் உரையாடிக்கொண்டு புகையிரத கடவையை கடக்கும்போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்

Share:

களுதாவளை கொம்புச்சந்தி அம்மளின் சமுத்திரத்தில் கும்பம் சொரிதல் நிகழ்வு.



மட்டக்களப்பு களுதாவளை கொம்புச்சந்தி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழா நேற்று (29-08-2015) சனிக்கிழமை காலை சக்கரை பொங்களுடன் நிறைவுற்று சமுத்திரத்தில் கும்பம் சொரிதல் நிகழ்வுடன் முடிவடைந்தது.







Share:

தேற்றாத்தீவு ஆதி வீரபத்திரர் ஆலய பொங்கல்

(மதுமிதா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம வழிவாட்டு தலங்களில் சிறப்பாக விளங்கும் தேற்றாத்தீவு ஆதி வீரபத்திர ஆலய பொங்கல் நேற்று(28.08.2015) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம் பெற்றது.இவ் பொங்கல் சடங்கு பூசையில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பல மக்கள் கலந்து கொண்டனர்.இவ்வாலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பொங்கல் இடம் பெறுவது வழக்கம். ஆவணி மாதத்தில் வரும் பௌர்னமியை அண்மித்து வரும் வெள்ளிக்கிழமை இச் சடங்கு இடம் பெறுகின்றது




Share:

சனி, 29 ஆகஸ்ட், 2015

வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் -ஆரத்தி எடுத்த சிறுமிகள் மயங்கும் அற்புதம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்றது.
Share:

தேற்றாத்தீவில் சிறப்பாக நடை பெற்ற வரலட்சுமி விரதம்

(மதுமிதா

இந்து பெண்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் சிறப்பாக விளங்குவது வரலட்சுமிவிரதமும் ஒன்றாகும். அந்த வகையில் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். இன் நாளில் விரதம் இருந்து அம்பாளினை நினைத்து விரதம் இருப்பர் பெண்கள்.கன்னிப் பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று விரதம் இருப்பதுடன் சுமங்கலி பெண்கள் தங்களில் தாலிபாக்கியம் நிலைக்க விரம் இருப்பர்.



இந்து ஆலயங்களில் பலவற்றில் நேற்று(28.08.2015) வெள்ளிக்கிழமை இவ் வரலட்சுமி பூஜை நடைபெற்றது. தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும் பல்லாயிரக்கணக்கான ஆடியார்கள் இவ் விரத்தை நோற்றனர். விரதத்தின் சிறப்பு பூஜையினை ஆலய பிரதம சிவஸ்ரீ வடிவேல் குருக்கள் நிகழ்த்தி வைத்தார்.






Share:

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,குருக்கள்மடம் செல்லக்கதிர்காமர் தேர் உற்சவம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க முருகன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் இரண்டாம் வருட சித்திரத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
Share:

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட மயில் கட்டுத் திருவிழா

வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய வருடாந்த ப்ரம்மோற்சவப் பெருவிழாவின் மயில் கட்டு விசேட திருவிழா வியாழக்கிழமை (28) நடைபெற்றது.ஆலயத்தின் பதின் மூன்றாவது நாளாகிய பொருவிழாவின் மிகவும் முக்கிய விசேட திருவிழாவாக மயில் கட்டுத் திருவிழா அமைவதுடன் தெய்வீகத்தன்மை வாய்ந்ததும் மிகவும் முக்கிய பாராம்பரிய அதிவிசேட திருவிழாவாக சித்தாண்டி முருகப்பெருமானின் பேராலயத்தில் நடைபெற்று வருகின்றது.


அந்தவகையில் நடைபெற்ற மயில் கட்டுத் திருவிழாவின் போது யாக பூசை, தீமிப்பு,  முருகப்பெருமானுக்கும் வள்ளியம்மைக்கும் இடையிலான திருமண நிகழ்வு, அன்றைய தினம் முதல்முதலாக சுவாமி மயில் வாகனத்தில் வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்கொடுக்கும் காட்சி என்பன மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக ஆலயத்தில் நடைபெற்றது.வரலாறும் பாராம்பரியம் நிறைந்த சித்தாண்டி கந்தனின் திருவிழாவில் மயில் கட்டு திருவிழாவை நாட்டின் பல பாகங்களிலும் இருந்து முருகப்பெருமானின் அருள்வேண்டி பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகைதந்திருந்தனர்.


மயில் கட்டுத் திருவிழா அனைத்து விசேட நிகழ்வுகளும் ப்ரம்மோற்சவ பிரதம குரு தருமை ஆகமப்பிரவீனா, ஆசீர்வாதசரபம் சிவஸ்ரீ.கைலாசநாத வாமதேவக் குருக்கள் (யாழ் - நயினை ஸ்ரீ நாகபூசணியம்மன் பேராலய ஆதீனகுரு) மற்றும் ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ.க.குகன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.





Share:

புதன், 26 ஆகஸ்ட், 2015

மட்டக்களப்பு நகரில் சுற்றுலா மையம் திறந்துவைக்கப்படவுள்ளது

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
Share:

சிறுமியைக் காணவில்லையென பெற்றோர் முறைப்பாடு

வீட்டிலிருந்த 14 வயதுச் சிறுமியைக் காணவில்லையென அவளது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

சம்பூர் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா உதவி

இலங்கையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு கட்டமாக திருகோணமலை, சம்பூரில் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவைளிக்கும் வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
Share:

சித்தாண்டி பேராலயத்திற்கு பெரும் திரளான காவடி வருகை!

(நித்தி)
 வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய வருடாந்த ப்ரம்மோற்சவப் பெருவிழாவின் பதினொராவது நாளாகிய இன்று (25) செவ்வாக்கிழமை நேர்த்திக்கடனுக்காக பெரும் திரளான பக்தர்கள் காவடிகள் வருகைதந்தன.சித்தாண்டியை அண்மித்த பல பிரதேசங்களில் இருந்து பக்தர்கள் காவடி ஆடி முருகனின் அருளைப்பெற வருகைதந்திருந்தனர்.




சித்தாண்டி காவடி கந்தனின் பேராலயத்தின் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து இறுதி வரைக்கும் பால் காவடி, முள்ளுக் காவடி, பறவைக் காவடி, பெண்கள் வாயலகு குத்தி நேர்த்தி செய்தல், ஆனந்தக் காவடி, அங்க பிரதட்சணை போன்ற பல்வேறு நேர்த்திகளை செய்து முடிப்பார்கள்.
நடைபெறயிருக்கின்ற ஆலய வருடாந்த பெருவிழாவின்போது ஆயத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் அனைத்தும் குடிமுறையிலான திருவிழாக்களாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெறயிருப்பதுடன் ஆலய திருவிழாக்களில் அதிவிசேட தினங்களான மயில்கட்டுத் திருவிழா 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களிலும் அதிகாலை 4.00 மணியளவில் முருகப்பெரும் வள்ளி தெய்வயானை சமேதராய் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடனும் நீல மயில் ஏறிப் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கண்கொள்ளா தெய்வீக காட்சி நடைபெறயிருக்கின்றன.

அந்தவகையில் நாளை ஆரம்பமாகவுள்ள மயில்கட்டு திருவிழாவிற்காக விசேட ஏற்பாடுகள் இன்றில் இருந்து ஆலயத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share:

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கடத்தப்பட்டவர்கள்,காணாமல்போனவர்களுக்கு நல்ல முடிவினை ஆணைக்குழு வழங்கவேண்டும் -மூன்று மகனை பறிகொடுத்த தாய்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனந்தெரியாதவர்களினால் கடத்திச்செல்லப்பட்டவர்களினதும் காணாமல்போனவர்களினதும் குடும்பங்கள் தினமும் வேதனையுடனும் கண்ணீருடனுமே வாழ்ந்துவருகின்றன.அவர்களுக்கு காணாமல்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நல்ல முடிவு வரும் என்றே வந்துள்ளதாக மூன்று மகன்மார்களை இழந்த மட்டக்களப்பு வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.
Share:

களுவன்கேணியில் கஞ்சா விற்பனை செய்த குடும்பஸ்தர் கைது

தெருவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த குடும்பஸ்தர் ஒருவரை ஞாயிறு மாலை தாம் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரரிவித்தனர்.
Share:

ஊனமுற்றவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினையை உடைத்தெறியும் நடன பயிற்சி பட்டறை

ஊனமுற்றவர்கள் எதிர்நோக்கு பிரச்சினைகளை துடைத்தெறிந்து சாதாரணமானவர்கள்போல் அவர்களையும் சமூகத்தில் உலாவச்செய்யும் வகையிலான விசேட விழிப்புணர்வு நடன பயிற்சிப்பட்டறையொன்று நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமாகின்றது.
Share:

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. இரு இளைஞர்கள் படுகாயம் -கரடியனாறில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் சாதனை வீரர் சங்கா!


இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா டெஸ்ட் அரங்கில் தனது கடைசி இனிங்ஸில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை விளையாடி சாதனை வீரர் சங்கா ஓய்வு பெற்றுள்ளார்.
'மிகவும் விவேகமானதும் திறமையான துடுப்பாட்டக்காரராக வர்ணிக்கப்படும்' குமார் சங்கக்காரா தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளையும் வெற்றிகளையும் நாட்டுக்காக ஈட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டு திடலில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில்  தனது கடைசி ஆட்டத்தை ஆட வந்தார் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார, இதன் போது சிறிய வயதுடைய கிரிக்கெட் வீரர்கள் சங்கா வரும் பாதை நெடுகிலும் துடுப்பு மட்டையை உயர்த்திப் பிடித்து மைதானத்துக்குள் நுழைந்த சங்காவை வரவேற்றனர். இந்திய வீரர்கள் இலங்கையணி வீரர்கள் என இரு சாராரும் சங்காவுக்கு மரியாதையளித்து அரங்கிற்குள் வரவழைத்தமை கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.

சர்வதேச போட்டியில் இதுதான் அவரது கடைசி இன்னிங்ஸ் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித சோகம் குடிகொண்டது. சங்கா களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடினார். 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், தான் சந்தித்த 18 ஆவது பந்தில் முரளி விஜயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இத்துடன் சங்கக்கார சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார்.

விடைபெற்றுச் செல்லும் போது இந்திய அணி வீரர்களனைவரும் சாதனை நாயகனை கைகொடுத்து வழியனுப்பினர். பின்னர் விடைபெற்றுச் சென்ற சங்கா தனது ருவிட்டர் தளத்தில் கருத்து வௌியிடும் போது

"எனது நாட்டுக்காக எமது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதை நான் மிகப் பெரும் கௌரவமாக நினைக்கின்றேன்...என்மீது காண்பித்த அனைத்துவிதமான அன்புக்கும் நன்றி... " என தெரிவித்துள்ளார்.  ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து (ODIs) சங்கா ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

களுவாஞ்சிகுடியில் புகைப்படக்கலை செயலமர்வு!


வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர் களுக்கான செயலமர்வு ஒன்றை இம்மாத இறுதியில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடாத்தவிருக்கின்றது. புகைப்படக் கருயின் தொழிற்பாடுகள் மற்றும் பாகங்கள், புகைப்பட ஒளியியல், மற்றும் நுணுக்கங்கள், போன்ற பல விடயங்களை இச்செயலமர்வு உள்ளடக்கியதால் ஆர்வமுள்ளவர்கள் முற்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மட்டக்களப்பு கல்லடியிலமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்திலோ அல்லது களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள எனேர்ஜி ஸ்ரூடியோவிலோ விண்ணப்பங்களை நேரடியாக பெறமுடியும். 0652222832, 0652250980, அல்லது 0712164061 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்து கொள்ள முடியும். முற்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே செயலமர்விற்கு அனுமதிக்கப்படுவர். பதிவுக்கான முடிவுத் திகதி: 27.08.2015. இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை கிளிக் செய்வதனூடாகவும் ஒன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்துகொள்ள முடியும். http://goo.gl/yu4lPy
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate