வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சிறிநேசனுக்கு துறைநீலாவணையில் மகத்தான வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள துறைநீலாவனையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சிறிநேசனுக்கு நேற்று புதன்கிழமை மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.


பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்ற ஒருவருக்கு துறைநீலாவணையில் வரவேற்பளிக்கப்பட்டது.

துறைநீலாவணை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த வரவேற்பு நிகழ்வுவினை நடாத்தியிருந்தனர்.

துறைநீலாவணை விக்னேஸ்வரர் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஆதரவாளர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate