வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர் களுக்கான செயலமர்வு ஒன்றை இம்மாத இறுதியில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடாத்தவிருக்கின்றது. புகைப்படக் கருயின் தொழிற்பாடுகள் மற்றும் பாகங்கள், புகைப்பட ஒளியியல், மற்றும் நுணுக்கங்கள், போன்ற பல விடயங்களை இச்செயலமர்வு உள்ளடக்கியதால் ஆர்வமுள்ளவர்கள் முற்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மட்டக்களப்பு கல்லடியிலமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்திலோ அல்லது களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள எனேர்ஜி ஸ்ரூடியோவிலோ விண்ணப்பங்களை நேரடியாக பெறமுடியும். 0652222832, 0652250980, அல்லது 0712164061 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்து கொள்ள முடியும். முற்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே செயலமர்விற்கு அனுமதிக்கப்படுவர். பதிவுக்கான முடிவுத் திகதி: 27.08.2015. இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை கிளிக் செய்வதனூடாகவும் ஒன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்துகொள்ள முடியும். http://goo.gl/yu4lPy







0 facebook-blogger:
கருத்துரையிடுக