வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மாமாங்கம் புனித சதாசகாய மாதா ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு மாமாங்கம் புனித சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமையான கிறிஸ்த ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் புனித சதாசகாய மாதா ஆலயமானது இப்பகுதி கிறிஸ்தவ மக்களின் முக்கியத்துவமிக்க ஆலயமாக கருதப்படும்.

மாமாங்கம் பங்குமக்களின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்த கொடியேற்றத்திருவிழாவினை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை பேதுருஜீவராஜ் நடாத்தினார்.

பத்து தினங்கள் ஆலயத்தின் திருவிழா நடைபெறவுள்ளதுடன் அடுத்த சனிக்கிழமை மாலை மாதாவின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.

மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா விசேட கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளதுடன் இந்த திருப்பலியை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் மறை ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகையினால் நடாத்தப்படும்.

வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தில் தினமும் விசேட செபமாலை நிகழ்வுகளும் விசேட திருப்பலிகளும் நடைபெறவுள்ளது.


















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate