புதன், 12 ஆகஸ்ட், 2015

பல்கலைக்கழக அனுமதிக்கான புதிய கைநூல் விரைவில்

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை மீளத் தயாரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது விநியோகிக்கப்படுகின்ற கைநூலை பயன்படுத்துவதில் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார்.
ஒரு சில மாணவர்களால் கைநூலில் உள்ள விடயங்களை புரிந்துக்கொள்ளவும் கடினமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்னும் ஓரிரு வாரங்களில் புதிய கைநூலை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பணிகள் நிறைவு பெற்றதும் கைநூலை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate