மட்டக்களப்பு பல்கலைக்கழக கலை கலாசார மாணவர் ஒன்றியத்தினால் கஸ்டப் பிரதேச பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக இளைஞர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றியத்தின் இரண்டாவது நிகழ்வாக இம்முறை சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன் போசகர் திரு மணிவண்ணன் தலைமையில் ஆரம்ப நாள் நிகழ்வு 05.11.2015 நேற்று மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட ஏறாவூர் பற்று கோட்டத்தில் உள்ள 6 பாடசாலை மாணவர்களை இணைத்து கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
பிரதம விருந்தினர்-மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் s.சிறிதரன். சிறப்பு விருந்தினர்களாக நன்நடத்தை உத்தியோகஸ்தர் s.மணிவண்ணன், மூதூர் கல்வி வலய இணைப்பாளர் (ஆங்கிலம்), தமிழ் ஆசிரியர் வி.விக்னேஸ்வரன், அமைப்பின் உறுப்பினர் அன்ரனி றஸ்கி செலர் என்போர் கலந்து சிறப்பித்தனர்.
முதல்நாள் தமிழ் பாடத்துக்கான கருத்தரங்கு ஆசிரியர் வி.விக்னேஸ்வரனால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கருத்தரங்கில் பங்குபற்றி பயன்பெற்ற பாடசாலைகளின் விபரம் :




















0 facebook-blogger:
கருத்துரையிடுக