(பழுவூரான்)அரசியற் கைதிகளின் விடுதலையில் மைத்திரி அரசாங்கம் மீண்டும் ஒட்டு மொத்த உலகத்தை ஏமாற்றிவிட்டது.
இன்று 11.11.2015ம் திகதி 31 அரசியற்கைதிகள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 28 ஆண்களும் 03 பெண்களும் அடங்குகின்றனர். இது பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிநேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட
போது அவர் இவ் அரசியற்கைதிகளின் விடுதலையானது நல்லாட்சியின் ஒரு கண்துடைப்பு செயற்பாடு மட்டுமல்லாமல் அரசியற் கைதிகள் மற்றும் அரசியற் தலைமைகளை ஏமாற்றிய செயற்பாடாகவும் காணப்படுகின்றது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் 2013ம் ஆண்டிற்குப் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஆனால் 2013ம் ஆண்டிற்கு முன்னர் கைது செய்யப்பட்ட யாருமே விடுதலை செய்யப்படவில்லை. இது மட்டுமல்லாமல் மேலும் 28 கைதிகளை நீதிமன்றத்து அழைத்து செல்லப்பட்ட போது சட்டமா அதிபரின் அனுமதியில்லை எனக்கூறி அவர்களை மீண்டும்; நவம்பர் 24 வரை சிறைகளுக்கு அனுப்பியுள்ளமையானது ஒட்டுமொத்த உலகத்தை ஏமாற்றிய செயற்பாடாக கருத வேண்டும்.
நாங்கள் கடந்த பத்து மாதங்களாக 217 கைதிகளையும் ஐனாதிபதி தலையிட்டு எந்தவிதமான நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பு வழங்கி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றே எமது தலைவரூடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் இந்த நல்லாட்சியானது எம்மை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உலகத்தையே ஏமாற்றிய செயலாக கருதவேண்டும். ஏனென்றால் அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்படாமல் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப்பிணையிலும், வவுனியா மற்றும் கொழும்பு பொலிஸ் நிலையங்களில் இரண்டு கிழமைகளுக்கு ஒருதடவை கையெழுத்து இடல் வேண்டும் என்னும் நிபந்தனையுடனும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை ஒரு கவலையளிக்கின்றது. இவ் அரசியற்கைதிகளின் விடுதலையானது நல்லாட்சியின் ஒரு கண்துடைப்பு செயற்பாடு மட்டுமல்லாமல் அரசியற் கைதிகள் மற்றும் அரசியற் தலைமைகளை ஏமாற்றிய செயற்பாடாகவும் காணப்படுகின்றது என தெரிவித்தார்.






0 facebook-blogger:
கருத்துரையிடுக