சர்வதேச ரீதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் 70 ஆவது ஆண்டு விழா, நாளை (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அதன்பின்னர் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் கொண்டுள்ள தொடர்பு மற்றும் அதன் சேவைகள் குறித்து, இந் நிகழ்வின்போது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் , ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.







0 facebook-blogger:
கருத்துரையிடுக