செவ்வாய், 30 ஜூன், 2015

கல்முனை தரவை சித்திவிநாயகர் ஆலய சிலைகள் சேதம்

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக இருந்த  இரண்டு சிலைகள் சேதப் படுத்தப் பட்டுள்ளன .  சிலைகளை  சேதப் படுத்தியவர்  பிடிக்கப் பட்டு  வாலிபர்களால்  நயப்புடைக்கப் பட்டு  கல்முனை பொலிசில்  ஒப்படைத்துள்ளனர் . சிலைகளை சேதப் படுத்தியவர்  ஒரு மன நோயாளி என  பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம்  நேற்று இரவு 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது . சந்தேகத்தில் கைது செய்யப் பட்டவர் கல்முனை  வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதுடன்  பொலிசாரின் தீவிர விசாரணை இடம் பெற்று வருகிறது . 
Share:

3ம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் திகதியில் மாற்றம்


நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 3ம் தவணைக்காக செப்டம்பர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. 
அத்துடன் மற்றைய பாடசாலைகள் அணைத்தும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
Share:

கிழக்கு மாகாணத்தில் 684 பேருக்கு முதலமைச்சரால் நிரந்தர நியமனம் வழங்கிவைப்பு.

கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பலருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நிரந்தர நியமணம் வழங்கிவைத்தார்.

உள்ளூராட்சி சபைகளில் பல்வேறுபட்ட தொழில்களுக்கு ஏராளமான இளைஞர் யுவதிகள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையிலேயே பணியாற்றி வந்தனர். தங்களின் குடும்ப நிலமையை சரியாகக் கவனிக்க முடியாமல் குறைந்த வருமானம் போன்ற கஷ்டத்துடன் இத்தனை வருடமாக பணியாற்றியவர்களுக்கான நியமனமே முதலமைச்சரால் வாழங்கிவைக்கப்பட்டன.

குறிப்பிட்ட நியமனத்தில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 131 நியமனங்களும், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 178 நியமனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு 375 நியமங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மூன்று மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஆரியபதி கலபதி, மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்ன, உறுப்பினர்களான, ஆர்.துரைரட்ணம், ராஜேஷ்வரன், ஆர்.எம்.அன்வர், ஜே.லாஹீர் , சிப்லி பாறூக், முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டு நியமனத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பல வருடமாக நிரந்தர நியமனம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தொழில் புரிந்த ஊழியர்கள் மிகவும் சந்தோஷத்துடன் குறிப்பிட்ட நியமனத்தைப் பெற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.









Share:

கிரான் வாராந்த சந்தை முன்றலில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்!



போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைமுன்னிட்டு மட்டக்களப்பு கிரான் வாராந்த சந்தை முன்றலில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் நடைபெற்றது.

பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தையும் இணைத்து மட்டக்களப்பு-வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா இந்த வீதி நாடகத்தை ஏற்பாடுசெய்திருந்தது.

பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இவ்வீதிநாடகத்தை பார்வையிட்டனர்.நாம் அர்ப்பணித்து சமூகத்தைக் காப்போம். எமது பிள்ளைகளை போதைவஸ்துகளிலிருந்து பாதுகாப்போம். துஷ்பிரயோகங்களிலிருந்து சிறார்களையும் பெண்களையும் காப்போம்.

எதிர்கால சமுதாயத்த்pற்கு போதைவஸ்;து மற்றும் வன்முறை இல்லாத அழகிய உலகினை உருவாக்கிகொடுப்போம் போன்ற விடயங்கள் இந்த நாடகத்தின் கருப்பொருட்களாய் அமைந்திருந்தன.




Share:

தேனூர் பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனின் வருடாந்த திருச்சடங்கு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் வருடாந்த திருச்சடங்கு  இன்று(30.06.2015) செவ்வாய் கிழமை கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முகக்களை எழுந்தளப்பணும் நிகழ்வினை தொடர்ந்து கதவு திறந்தல் சடங்கு இடம் பெற்றது. 

Share:

மட்டக்களப்பில் 365167 பேர் வாக்களிக்கத் தகுதி

கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களால் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் 2015 பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க 3,65,167 பேர் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். 

  • மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும் 
  • கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் 
  • பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் 

வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள. 

  • மட்டக்களப்பில் 199 நிலையங்களும் 
  • கல்குடாவில்115 நிலையங்களும் 
  • பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்கள்  நிலையங்களும்
அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Share:

சிகிரியா ஓவியத்தில் பெயர் எழுதி சிறைக்கு சென்ற யுவதிக்கு வேலை வாய்ப்பு!

(சித்தாண்டி நித்தி)

  சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதிய யுவதிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பினை வழங்க அவரின் சுயவிபரக்கோவையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பெற்றுக்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 14.02.2015 அன்று சித்தாண்டி, விநாயகர் புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து கடந்த மாதம் விடுதலையாகியிருந்தார்.இந்த நிலையில் குறித்த யுவதிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அரச துறையில் தொழில் வாய்ப்பினை வழங்க இன்று உதயசிறியிடம் இருந்து சுயவிபரக்கோவையைப் பெற்றுக்கொண்டார்.


குறிப்பிட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ்வரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Share:

சித்தாண்டி சிகண்டி கல்வி நிறுவகத்தினால் வறிய குடும்பத்தைசேர்ந்த மாணவர்களுக்கான உதவிதொகை வழங்கிவைப்பு

(நித்தி)
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானம், கணிதம், சட்டத்துறை பிரிவில் கல்வியைத் தொடரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தர மாணவர்களுக்கான கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (29) செவ்வாக்கிழமை சிகண்டி கல்வி நிறுவக குழுமத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது.

சிகண்டி கல்வி நிறுவகமானது சித்தாண்டி கிராமத்தில் மிகவும் வறிய நிலையில் தங்களின் பாடசாலை கல்வி, சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பட்டப்படிப்புகளை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்துவருன்றதுடன். கல்வி சமுகம் சார்ந்து தங்களின் பணிகளை முன்னெடுத்துவரும் சிகண்டி கல்வி நிறுவகம் மாணவர்களின் கல்வி நலனுக்காக கிராமத்து பொதுமக்கள் மற்றும் உதவி செய்ய முன்வரும் நன்கொடையாளர்களிடமிருந்தே இத்தொகையை மாணவர்களின் கல்வி நலனக்கு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டுக்கான உயர்தரத்தில் கணித விஞ்ஞானம் மற்றும் சட்டத்துறை கல்வி கட்கும் மாணவர்களுக்கு ஊக்கிவிப்பு கொடுப்பனவு கொடுக்கப்பட்டது கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கான உதவி பணத்தொகையை கல்குடா கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, பாடசாலையின் அதிபர் பகிதரன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். இதன்போது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் கணித விஞ்ஞான பிரிவுகளுக்கு மாணவர்கள் ஆர்வமாக கல்வியை முன்தொடர முன்வந்தாலும் பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் மாணவர்கள் தங்களின் சுய விருப்பதின்பேரில் கல்வியை தொடரமுடியாதுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு நல்ல உள்ளங்கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்குமிடத்து குறித்த பாடசாலையில் இருந்து உயர் கல்விமான்களை உருவாக்ககூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டம் யுத்த காலங்களில் இருந்து தற்போதுவரைக்கும் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றமை காணக்கூடியதாக இருக்கின்ற நிலையில் மாவட்டத்தில் கல்வி சமுகத்தை உயர்த்துவதற்காக பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் குறைவான செயற்பாடுகளே முன்னெடுக்கபடுவதாக தெரியவருகின்றது.




Share:

திங்கள், 29 ஜூன், 2015

எல்லாவற்றையும் நழுவவிடாதீர்கள் அன்பின் தமிழ் உறவுகளே!

 உழவி உற்பத்தி செய்பவர்கள் நாங்கள் என்பது மாத்திரம் போதாது, அவற்றுக்கு வலுச் சேர்த்து அவற்றின் முழுபயனையும் அனுபவிக்க ஆவன செய்யவேண்டும்.

Share:

மட்டக்களப்பில் கடும் மழை

மட்டக்களப்பில் கடும் உஸ்ண கால நிலை நிலவி வந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் கடும் மழை பெய்துவருகின்றது.
Share:

தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்யுமாறு வலிறுத்தி கையெழுத்து பெறும் போராட்டம்

மார்ச்12 பிரகடனம் மூலம் சிறந்ததோர் அரசியலுக்காக என்னும் தொனிப்பொருளில் பிரஜைகளை விழிப்பூட்டும் வாகனம் இன்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பினை வந்தடைந்தது.
Share:

தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு வீடுகள் கையளிப்பு

அரசாங்கம் வழங்கும் உதவிகளுடன் மக்களும் பங்களிப்பினை வழங்கும்போதே அவை பூரண வெற்றியை அடையும் என தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.
Share:

வந்தாறுமூலை விஸ்ணு சந்நிதான திருவேட்டை திருவிழா

(நித்தி)
மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க  வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழாவின் திருவேட்டை இன்று (26) ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.ஆலயத்தில் இருந்து செந் நெல் விளை நிலத்தில் அமைந்துள்ள சுமார் 200ஆம் ஆண்டுக்கு முற்பட்ட கிடாக் குளிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.




திருவேட்டைத் திருவிழாவிற்காக மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் இருந்து வயல் நிறைந்த பகுதியான கிடாக்குளி ஆலயத்திற்கு மக்கள் உழவு இயந்திரத்திலும் வாகனங்களிலும் ஒன்றுகூடி; திருவேட்டை நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் கண்டு மகிந்தனர்.

திவேட்டை திருவிழாவிலே ஹனுமான் மற்றும் இராமர் போன்ற அவதாரங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை கொண்டு திருவேட்டை நடைபெற்றது.

நடைபெற்ற விசேட நிகழ்வில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேக பூசைகள் நடைபெற்றதும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணுவுக்கு அபிசேக பூசைகள் அனைத்தும் மகோற்சவ குருவான ஷப்தரிஷி இந்து குருபீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள் உட்பட ஆலய பிரதம குரு விஸ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் அவர்களினாலும் நடைபெற்றன.

இலங்கா புரியின் ஆழிமழைக்கண்ணனுக்கு உன்னதமான அற்புத பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (19) கொடியேற்றதுடன் ஆரம்பமாகி எதிர்வரும் புதன்கிழமை (01.07.2015) களுவண்கேனி இந்துமா சமுத்திர தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்படத்தக்கது.






Share:

அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த்த "மாபெரும் மென்பந்து கிரிக்கட் சவால் கிண்ணம் -2015"

அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக வெற்றி விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "மாபெரும் மென்பந்து கிரிக்கட் சவால் கிண்ணம் -2015" இப் போட்டி கடந்த 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த இவ் ஞாபகார்த்த போடடியானது எதிர்வரும் மாதம் 01.07.2015 புதன் கிழமை தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழக பொது மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.




Share:

மாமாங்கம் சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று இரவு கதவுதிறத்தலுடன் ஆரம்பமானது.
Share:

வாகரை புளியங்கன்றடி முத்துமாரி அம்பாள் ஆலயதில் நடைபெற்ற பாற்குட பவணியும் சங்காபிசேகமும்

(நித்தி)
மட்டு வாகரை புளியங்கன்றடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் ஆரம்ப நாளாகிய ,ன்று சனிக்கிழமை (27) பாற்குடப் பவணியும் 108 சங்காபிஷேகமும் வாகரை செல்வ விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ சொ.ரதன் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.







இன்று நடைபெற்ற பாற்குட பவணி நிகழ்வானது புளியங்கண்டலடி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஆலயத்திற்கு வந்தடைந்தது கோம பூசை நடைபெற்றதும் பிரதான கும்பம் மற்றும் 108 சங்காபிஷேகமும் நடைபெற்று விசேட பூசைகள் நடைபெற்றது.

அன்னை முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் உற்சவ காலங்களில் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் இடப்பெறவுள்ளதுடன் எதிர்வரும் விழயாக்கிழமை (02) அதிகாலை விசேட பூசை இடம்பெற்றதும் கன்னிமார் பூசை, திருக்குளிர்த்தி அதனைத்தொடர்ந்து கும்பம் சொறிதல் போன்றவற்றுடன் இவ்வாண்டிற்க்கான அன்னையின் உற்சவ காலம் நிறைவடையவுள்ளது.





Share:

ஞாயிறு, 28 ஜூன், 2015

மட்டக்களப்பில் காடுகள் அழிக்கப்பட்டதால் அதிகளவில் வெப்பம் -பிரதேச செயலாளர் தவராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிளவான காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே இன்று வெப்பம் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
Share:

சனி, 27 ஜூன், 2015

“பாடுமீன்கள் சமர்” - விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டி –வெளியேறிச்சென்ற மத்திய கல்லூரி அணி

மட்டக்களப்பின் சமர் என வர்ணிக்கப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மைக்கேல் கல்லூரிக்கும் இடையிலான பாடுமீன்கள் சமர் கிரிக்கட் சமரில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் புனித மைக்கேல் கல்லூரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Share:

விவேகானந்தா மகளிர் கல்லூரியில் விவேகாவின் பசுமை செய்தி மடல் வெளியீடு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு விவேகாவின் பசுமை செய்திமடல் வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திருமதி ஹரிதாஸ் திலகவதி தலைமையில் நடைபெற்றது.
Share:

கொக்குவில் அருள்மிகு ஸ்ரீவீரம்மாகாளியம்மன் திருச்சடங்கினை ஒட்டி ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு ஸ்ரீவீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை ஒட்டி நேற்று காலை மாபெரும் பால்குட பவனி நடைபெற்றது.
Share:

அரச தொழில் வாய்ப்புகளைப் பெற வேண்டுமா? இதோ களுவாஞ்சிகுடியில் NVQ பாடநெறிகள்!!!


இளஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இலங்கைக்கு தொழிற் பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து களுவாஞ்சிகுடி தொழிற் பயிற்சி கல்லூரியில் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக் கூடிய இவ் வருடத்திற்கான பாட நெறிகளை இரண்டாவது தடவையாக ஆரம்பிக்கவுள்ளது என்பதனை உங்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் மிகச் சிறந்த தொழில் வாய்ப்புகளை உடனடியாக வழங்கும் முகமாக NVQ சார் பயிற்சி நெறிகளை வழங்கும் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் பாடநெறிகளுக்கான பதிவு எதிர்வரும் 30.06.2015 செவ்வாய்கிழமை களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலய வீதியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் திறந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனால் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள ஆர்வத்துடன் உள்ள க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களும் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களும் இவ் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்டு தங்களின் எதிர்காலத்தினை வளப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


பின்வரும் பாடநெறிகள் ஆரம்பமாகவுள்ளது கணணி, நீர்குழாய் பொருத்துதல், உருக்கிஒட்டுதல், மின்இணைப்பாளர், மணப்பெண் அலங்கரிப்பாளர் ஆகிய பாட நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் சில பாடநெறிகளுக்கு சிறுதொகைப் பணம் வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும். எனவே 0777140869 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்
Share:

உயர்தரப் பரீட்சையின் கால அட்டவணையில் மாற்றம்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கால அட்டவணை மாற்றப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கால அட்டவணை மாற்றம் குறித்து விரைவில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate