வியாழன், 18 ஜூன், 2015

பெரியகல்லாறு கடற்கரையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

(புருசோத்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் இருந்து வயோதிப பெண்னொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெரியகல்லாறு,02ஆம் வட்டாரம் நாகதம்பிரான் ஆலய வீதியை சேர்ந்த முருகேசு திரவியம்(75வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை இவர் கடலில் குதித்துள்ளதாகவும் பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவந்த நிலையிலேயே குறித்த பெண் இவ்வாறு கடலில் பாய்;ந்து தற்கொலைசெய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate