புதன், 17 ஜூன், 2015

மட்டக்களப்பு பஸ் நிலையம் முன்பாக விபத்து –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மட்டக்களப்பு –கல்முனை பிரதான விதியின் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் இன்று காலை ௦9 மனியளவில்  வீதியை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்களில் மோதுண்டு ஒருவர் விபத்துக்குள்ளானதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர் .


இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த 28 வயது ,பாக்கியநாதன் என்பவர் பலத்த காயங்களுக்கு  உள்ளான  நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இவர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக  வந்த மோட்டார் சைக்கள் மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிக்கின்றனர்,
அதேவளை  விபத்தை ஏற்படுத்தியவர்  மோட்டார் சைக்களுடன் தலைமறைவாகி உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இவரது விபத்து தொடர்பாகவும் , விபத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாகவும்  மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate