ஞாயிறு, 14 ஜூன், 2015

ஊடகவியலாளர்களுக்கான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

வடக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் ஆரம்பமானது.
இரு நாள் பயிற்சிப்பட்டறையாக இடம் பெற்று வரும் குறித்த நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பு சர்வோதைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது சட்டம் பற்றிய புரிந்துணர்வு, ஊடகவியளின் உரிமைகளின் அடிப்படையில் அனுகுதல் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
இரண்டாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டங்களிலுள்ள மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும், பால் நிலை பற்றிய உணர் திறன்களான அறிக்கைகள் தொடர்பாகவும், நாடாளாவ ரீதியிலுள்ள உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்ட்டு வருகின்றது.
இந்த நிகழ்வானது காலி, மாத்தறை, சிலாபம், அம்பாறை மற்றும் தமிழ் பிரதேசங்களிலும் இடம் பெற்று வருகின்றது.
சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தினால் நடாத்தப்படும்; இந்த செயலமர்வில் சட்டத்தரணிகளான கே.ஐங்கரன், ஏ.அருள்வானி சுதர்சன், மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் ஏ.எல்.இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate