செவ்வாய், 16 ஜூன், 2015

கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் நியமனம்

கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்று காலை கிழக்கு மாகாணசபை அமர்வு நடைபெற்றது.அதற்கு முன்பாக கட்சி தலைவர் கூட்டம் நடைபெற்றது.

இங்கு கட்சி தலைவரை நியமிப்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கையொப்பமிட்டு விமலவீர திஸாநாயக்கவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு மாகாண தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைவாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக விமலவீர திஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate