ஞாயிறு, 14 ஜூன், 2015

சீர்பாத மக்களின் குலதெய்வமான வீரமுனை ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய கொடியேற்றம் நாளை

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

சோள இளவரசி சீர்பாததேவியினால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயமானது மிகவும் தொன்மைவாய்ந்த ஆலயமாக கருதப்படுகின்றது.

பத்து தினங்கள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளதுடன் தினமும் சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளதுடன் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜைகளும் நடைபெறவுள்ளது.

வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் புதன்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate