சனி, 13 ஜூன், 2015

ஐந்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா வந்தாறுமூலையில் கோலாகலமாக ஆரம்பம்

ஐந்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கோலாகலமாக ஆரம்பமானது.


இன்று காலை கண்ணகி இலக்கிய விழாவினை முன்னிட்டு மாபெரும் பண்பாட்டுப்பவனி நடைபெற்றது.

ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இருந்தும் சித்தாண்டி முருகன் ஆலயத்திலிருந்தும் பவனி இடம்பெற்று வந்தாறுமூலை கண்ணகிஅம்மன் ஆலய முன்றிலில் வந்தடைந்ததும் அங்கிருந்து வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்துக்கு ஊர்வலம் சென்றது.

அதனைத்தொடர்ந்து அங்கு இன்றைய தின விழாக்குழு தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.எல்.விக்கிரம ஆராச்சி,கண்ணகி இலக்கிய கூடல் காப்பாளர் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பேரணி பாடசாலையினை வந்தடைந்ததும் பாடசாலை முன்றிலில் வசந்தன் கூத்து நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.













































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate