செவ்வாய், 23 ஜூன், 2015

வை.எம்.சீ.ஏ.யின் சாரணர் திறந்த குழுவின் 15வது ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.அமைப்பில் சாரணர் திறந்தகுழு ஆரம்பிக்கப்பட்டு 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.அலுவலகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.


சாரணர் கொடியேற்றப்பட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சாரணர் சேவைகளுக்காக உள்ளீர்க்கப்பட்ட நான்கு சாரண ஆசிரியர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

வை.எம்.சி.ஏ. திறந்த சாரணர் குழுவின் பொறுப்பாளர் எஸ்.பற்றிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் தலைவர் டி.டி.டேவிட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சுதாகரன் சிறப்ப அதிதியாக கலந்துசிறப்பித்தார்.

வை.எம்.சி.ஏ.சாரணர் திறந்தகுழு ஆரம்பிக்கப்பட்டு 15வது ஆண்டு நிறைவினை கொண்டாடும் இந்தவேளையில் குறித்த குழுவில் 89 சாரணிய மாணவர்கள் உள்ளதாகவும் இவற்றில் 24 பெண் சாரணியர்கள் அடங்குவதாகவும் பொறுப்பாளர் எஸ்.பற்றிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளில் சாரணிய குழுக்கள் இயங்கிவரும் நிலையில் அவற்றில் இணைய முடியாத வறிய மாணவர்களை இதில் இணைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate