புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எஸ்.எஸ்.அமல் ஆசிரியர் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான எஸ்.எஸ்.அமல் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன

முதலில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் சென்று நன்றி கூறுவேன்.

மட்டக்களப்பிலுள்ள மூன்று தொகுதிகளிலும் அலுவலகங்களை அமைத்து சேவையாற்றுவேன்.

கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக கிராம அபிவிருத்தி ஆலோசனை சபைகளை அமைத்து அதனுடாக செயலாற்றுவேன்.

முடிந்தளவு இலவசக் கல்வியை வழங்குவதினூடாக வீட்டிற்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு அரும்பாடுபடுவேன்.

இலவச சட்ட ஆலோசனை மையங்களை உருவாக்கி அதனூடாக மக்கள் மத்தியில் அடிப்படைச் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவேன்.

இனப்பிரச்சினைக்கான சிறந்த தீர்வினை அடைவதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் ஆக்க பூர்வமான செயற்பாடுகளுக்கு இயன்றளவான பங்களிப்புக்களை வழங்குவேன்.

இலவச வைத்திய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப உதவுவேன்.

விவசாயிகள், மீன்பிடியாளர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரின் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை மேம்படுத்த உதவுவேன்.
அரச உத்தியோகத்தவர்களின் நலம் சாரந்து செயற்படுவேன்.

சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.
இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவேன்.

புத்திஜீவிகளின் கருத்துக்களு;கு செவிமடுத்து செயற்படுவேன்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் உட்பட அனைவரின் நலனுக்காக உழைப்பேன்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அவர்களின் விடுதலையில் உள்ள சட்ட சிக்கல்களை ஆராய்ந்து, சட்டதரணிகளை நாடி உதவியினை பெற்றுக் கொடுப்பேன்.

தமிழ் பேசும் மக்களின் மொழி, சமயம், கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்க்கப் பேண அதிகம் உழைப்பேன்.

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பேன்.
விஷேட தேவையுள்ளவர்களின் நலனுக்காக உழைப்பேன்.

இயற்கை அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவேன்.
எமது சமூகத்திற்கு அநீதி விளைவிக்கப்படும் போது பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் சர்வதேசத்திலும் பலத்தகுரலாக அமைவேன்.

போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முழுமையாக என்னை அர்ப்பணித்து செயற்படுவேன்.

விளையாட்டு கழகங்களை மேம்படுத்தும் பொருட்டு, தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பேன்.

இன்னும் பல.......... 





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate