சனி, 26 டிசம்பர், 2015

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கத்தின் 10 வது ஆண்டு நிறைவு

2005ம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 10வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுஇன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி. சேயோன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஓய்வு நிலை பேராசிரியர் க. பத்மநாதன் இந் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.

மட்டக்களப்பு ஆயர்  அதி வண பொன்னையா யோசப் ஆண்டகை , சிவயோகச் செல்வன் சாம்பசிவ குருக்கள் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன். , சா. வியாளேந்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி. துரைராஜசிங்கம், மாகாண சபை  துனை தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் , ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா,முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா மற்றும் பா. அரியநேத்திரன்;  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


2004 கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள்  அமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல்  மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் சில காலம் கொழும்பிலே தங்கியிருந்தார்.
இந்த நிகழ்வின்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளைத்தலைவர் வே.தவராஜாவினால் எழுதப்பட்ட“காலத்தினை வென்றுவாழும் தமிழன காவலன்” என்னும் நினைவு மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

அவர் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெறும் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொள்வது வழமையாகும்.   கொழும்பிலிருந்து நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொள்வதற்காகவே முதல் நாள் அவரும் அவரது துனைவியாரும் மட்டக்களப்புக்கு திரும்பியிருந்தனர்.

நத்தார் நள்ளிரவு ஆராதனை முன்னாள் மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் வண கிங்ஸிலி சுவாம்பிள்ளையினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளை தேவாலயத்திற்குள் வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் சம்பவத்தில் அவரது மனைவி  சுகுணம் யோசப் உட்பட  சிலர் காயமடைந்தனர்.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate