வெள்ளி, 25 டிசம்பர், 2015

மட்டு. சிறைச்சாலையில் இருந்து 6 கைதிகள் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 6 ஆண் சிறைக்கைதிகள் இன்று (25) வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

உலக கிறிஸ்தவர்கள் நேற்றைய தினம் பாலன்பிறப்பினை கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவினை முன்னிட்டு மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளிற்கு அமைவாக இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச்.அக்பர்  தெரிவித்தார்.

இவர்களை விடுதலை செய்யும் வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச்.அக்பர்  மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர்  என்.பிரபாகரன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் , சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைவாசம் அனுபவைத்துவந்தவர்களே இவ்வாறாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate