சனி, 26 டிசம்பர், 2015

காரைதீவில் சுனாமி ஆத்மா சாந்திப் பிரார்த்தனை உணர்வுபூர்வமாக தீபங்கள் ஏற்றி.

2004ம் ஆண்டு ஆழிப்பேரலையின் சீற்றத்தால் காவுகொள்ளப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களுடைய ஆத்மா சாந்தி வேண்டிய ஆத்மா சாந்திப் பிரார்த்தனையானது இன்று 26ம் திகதி காரைதீவு கடற்கரையில் பிரம்மாண்டமான முறையிலும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

காரைதீவு மீனவ சமூகத்தினரின் ஒத்துழைப்போடும் இளைஞர்களது பூரண ஒத்துழைப்போடும் நடைபெற்ற இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்காக பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீர்த்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி தீபங்களும் ஏற்றினர்.

மேலும் இந் நிகழ்வில் பிரதானமாக கடற்கரை மணலிலே மஹாவிஸ்ணுவின் நெற்றியில் இருக்கின்ற நாமத்தைப் போன்ற ஒரு அமைப்பு கடற்கரை மணலிலே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அதனைச் சுற்றியும் அதனுள்ளேயும் தீபங்கள் ஏற்றி பிரார்த்தனை நாடாத்தியமை குறிப்பிடத்தக்கது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate