வியாழன், 31 டிசம்பர், 2015

 நீதவானின் காரின் மீது கல் வீசிய 4 பேர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் கடந்த திங்கட்கிழமை (28) நீதவான் ஒருவரின் காரின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் 04 சந்தேக நபர்களை புதன்கிழமை (30) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் ஒருவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.   15 வயதுடைய 02 பேரும் 16 வயதுடைய 02 பேருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்றில் மாவட்ட நீதவானாகக் கடமையாற்றுபவரின் காரின் மீதே இந்தக் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate