வெள்ளி, 25 டிசம்பர், 2015

விவசாயத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய குறும்படம் – 'விவசாயி' வெளியீட்டு விழா


சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கூட்டுமுயற்சியால் உருவாகிய 'விவசாயி' என்னும் குறும்படமானது எதிர்வரும் 27.12.2015 (ஞாயிறு) பிற்பகல் 2.00 மணிக்கு வந்தாறுமூலை ஏ.பி.சீ வீதியில் உள்ள தரிசனம் ஒன்றியத்தின் பிரதான மண்டபத்தில் உத்தியோக பூர்வமாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது



சேற்றிலே காலை வைத்து பலர் வீட்டிலே சோற்றைக் கொடுக்கும் உன்னத மனிதர்களான விவசாயிகளின் வாழ்வியல் முறைகள் சிலவற்றை அடிப்படையாக வைத்து விவசாயி எனும் குறும்திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.

நானிலம் கலைக்குழுமம் பெருமையுடன் வழங்கும் இக்குறும்படத்தில் சபாரெத்தினம், சிவாங்கன், விஜிகரன், பிரதீபன், நேசம்மா மற்றும் பல கலைஞர்கள் நடிக்கின்றனர். குறும்படத்தினை தேவராஜ் அவர்கள் தயாரிப்பதுடன், கதை வசனம் எழுதி படத்தினை அக்சயன் இயக்குகின்றார்.  

குறித்த குறும் திரைப்படத்தினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைகின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர். 





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate