ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!- மட்டக்களப்பில் சம்பவம்



மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தன்னாமுனை மைலாம்பாவெளி சவுக்கடி வீதியைச் சேர்ந்த பிரேமசந்திரன் ஜெனிஸ்டன் (வயது 10) என்ற சிறுவனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை சுமார் ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு குறித்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

சிறுவனின் தாயார் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையில் சிறுவன் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர். 

குறித்த சிறுவன் மைலாம்பாவெளி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன். 

இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate