திருகோணமலையில், கடல்வள பாதுகாப்பு ஐக்கிய கடல்தொழிலாளர் சம்மேளனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை காலை 09 மணியளவில் திருகோணமலை விஜித்தபுர பகுதியிலிருந்து குறித்த பேரணி ஆரம்பித்து, ஏகாம்பரம் வீதியூடாக மணிக்கூட்டு கோபுரத்தினை அடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து டொகயாட் வீதி ஊடாக தபால் கந்தோர் வீதியை அடைந்து உட்துறைமுக வீதி ஊடாக திருகோணமலை மாகாணசபை கட்டடத்தொகுதியை சென்றடைந்துள்ளது.
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கடலில் பாவிப்பதற்கு எதிராக இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 800 க்கும் அதிகமான மீனவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுருக்குவலை, டைனமைட் பாவனை மூலமாக கடல் வழங்களும் கடற்தொழிலாளர்களது எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடும் மீனவர்கள் தமக்கான தீர்வினை உடனடியாக பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், குறித்த பேரணி காரணமாக திருகோணமலை நகரின் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.







0 facebook-blogger:
கருத்துரையிடுக