ஞாயிறு, 27 டிசம்பர், 2015

IT, ஆங்கிலம் இரு கண்கள் : வியாளேந்திரன் MP தெரிவிப்பு





இன்று ஞாயிற்றுக்கிழமை 27.12.2015 Guide Notion Campus இனால் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான IT, ஆங்கில கற்கை தொடர்பான கருத்தரங்கிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலகட்டத்தில் தாய் மொழி அறிவோடு ITஅறிவும் ஆங்கில அறிவும் இன்றியமையாத தொன்று என தெரிவித்தார்

எதிர் வரும் காலங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற தகவல் தொடர்பாடல் பூங்கா (IT park) எனும் திட்டத்தினை வரவேற்பதாகவும் அதற்காக எமது பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் வளத்தினை பயன்படுத்தி எமது பிரதேசத்தினை தகவல் தொடர்பாடலில் (IT) சிறந்த பிரதேசமாக மாற்றுவதற்காக தாம் அர்பணிப்புடன் செயலாற்ற உள்ளதாக தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் மாணவ மாணவிகள் கற்கையினை தெரிவு செய்யும் பொழுது விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் கற்கை நிலையங்கள் தொடர்பாக அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொண்டார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate