சனி, 26 டிசம்பர், 2015

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய திரும்வெம்பாவை நிகழ்வு

நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று காலை திருவெம்பாவை உற்சவத்தின் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை காலை (26) களுதாவளைக் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

பிள்ளையார் மூசிக வாகனத்திலும், சிவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், நேற்று அதிகாலை உள்வீதி வெளிவீதி வலம் வந்தனர்.

வீதியுவந்ததும் களுதாவளை கடற்கரையில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கு அரப்பு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் களுதாவளைக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன் திருவாதிரை நட்சத்திரத்திதில் தீர்த்தம் இடம்பெற்றது.




















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate