திங்கள், 2 மே, 2016

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் நடாத்திய மேதினக் கூட்டமும் மேதின ஊர்வலமும்

(கஜன்)
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் நடாத்திய மேதினக் கூட்டமும் மேதின ஊர்வலமும் இன்று கல்முனையில் சங்கத் தலைவரும் தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில் வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.ஆரம்பத்தில் கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டப முன்றலிலிருந்து வளைவுச் சந்தி பிரதான வீதி ஊடாக மேதின ஊர்வலம் வை.எம்.சீ மண்டபத்தில் வந்தடைந்தது.
இந்நிகழ்விற்கு திகாமடுல்ல மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் செல்லையா பேரின்பராசா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் மற்றும் வட மாகாணத்தில் இருந்து முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate