மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் இன்று 22.05.2016 காலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடராசா நடேஸ்வரன்(47)
வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலையில் அவரது வீட்டிலே தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களால் கண்தன் பிரகாரம் அவர்கள் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உச்ச நீதிமன்றத்தின் பிணைக்கைதியும் எதிர்வரும் 25ம் திகதி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக