செவ்வாய், 9 ஜூன், 2015

வந்தாறுமூலையில் கண்ணகி கலை இலக்கிய விழா - 2015

(மூலையுரன்)


கிழக்கிலங்கையில் கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குவது பண்டைய கால   தமிழர் தொன்மைகளின் ஒன்றாக இன்றுவரை  பயின்றுவரும் கண்ணகி   தொடர்பான தொன்மைகளை   மீட்டெடுப்பது,   கிழக்கிலங்கையில் பண்பாட்டு அடையாளங்களான கண்ணகி தொடர்பு பட்ட கலைகளை வெளிக்கொணர்வது மற்றும் கண்ணகி தொடர்பான ஆய்வாளர்களை   ஊக்குவிப்பது என்ற நோக்கோடு கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கிலங்கை கண்ணகி கலை இலக்கிய  கூடல்  நடாத்தும் ஐந்தாவது மாபெரும் கண்ணகி கலை இலக்கிய  விழா -2015 அள்ளியே பொன் சொரியும் வந்தாறுமூலை வளர் ஆதி கண்ணகையம்மன் முன்றலில் ஆரம்பமாகி மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய மண்டபத்தில் எதிர்வரும்  யூன்  13 ம் மற்றும் 14 ம் திகதிகளில் நடைபெவுள்ளது.

மேலும் கண்ணகி கலை இலக்கிய  விழா 2015 ஆனது நம் மக்களின் கலை பண்பாட்டு அடையாளங்களை  மீட்டெடுத்து அதனை ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு   இலங்கை மட்டுமல்லாமல் பன்ணாட்டிற்க்கும் கொண்டுசெல்ல இருக்கின்றது. அந்தவகையில்  தமிழர்  பாரம்பரிய  கலை பண்பாடுகளை மீட்டெடுத்து அதனை ஆவணப்படுத்தி ஊர்வலம் கண்காட்சி ,பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகள்  மற்றும்  ஆய்வரங்கங்கள்  போன்றவற்றை  நடாத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வினை  வெற்றிகரமாகவும்  மிக கோலாகலமாகவும் கொண்டாட மக்கள்  ஆதரவும்  பங்களிப்பும்  மிகவும் முக்கியமானது என்ற  நோக்குடன் தமிழர் பாரம்பாரிய   கலை பண்பாட்டு  விடயங்களில் ஆர்வமுள்ள கலைமான்கள், கல்விமான்கள்,  மாணவர்கள்,  இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஆய்வாளர்கள்  அனைவரையும் கண்ணகி கலைக்கூடல் பேராளர்களாக இணைந்து தங்களது பங்களிப்பினை  தந்துதவுமாறு  வேண்டி நிற்கின்றார்கள் விழா ஏற்பாட்டார்கள்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate